For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சடார்னு வீட்டுக்குள்ள குதிச்சு நாயை கவ்விய சிறுத்தை.. அலறும் மக்கள் - சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    வீட்டுக்குள்ள ஏறி குதிச்சு நாயை கவ்விய சிறுத்தை - வீடியோ

    சிறுத்தை, வீட்டுக்குள் புகுந்து நாயை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமாகோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா

    சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

     சிறுத்தை நடமாட்டம்

    சிறுத்தை நடமாட்டம்

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா அருகே உள்ள ஹோசகொப்பல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இந்தச் சிறுத்தை அந்தப் பகுதியில் செம்மறி ஆடுகள், நாய்களை தூக்கிச் சென்று கொன்றுள்ளது. இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

    நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை

    நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை

    இந்நிலையில், ஹோச கொப்பல் கிராமத்தை சேர்ந்த தேவகவுடா என்பவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் நேற்று இரவு வீட்டு வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அவரது வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நாயை தூக்கி சென்றது.

    சிசிடிவி காட்சி

    சிசிடிவி காட்சி

    குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சிறுத்தை, வீட்டுக்குள் புகுந்து நாயை தூக்கிச் சென்ற காட்சிகள் தேவகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள், குழந்தைகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

     பொதுமக்கள் புகார்

    பொதுமக்கள் புகார்

    சிறுத்தைகள் நடமாட்டம் பற்றி வனத்துறையிடம் தெரிவித்தாலும் வனத்துறை கண்டுகொள்ளாததால் சிறுத்தை கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Leopard catches sleeping dog after entering into a house in Hassan district of Karnataka. CCTV footage surfaces on internet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X