வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நாளை.. நாம் வெல்லலாம்!
வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நேற்று நம்மிடம் இல்லை.. அது போயாச்சு.. இன்று நிதர்சனம்.. நாளை அது நமக்கு சாதமாகவும் மாறலாம்.. அல்லது பாதகமாகவும் போகலாம்.
ஆனால் மேட்டர் என்னன்னா.. இன்று நீங்கள் எப்படி உழைக்கிறீர்களா அதுவே நாளைய உங்களது நிலையை உறுதி செய்யும்.. நாளை வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் இன்று நன்றாக உழையுங்கள்.. நேற்றைப் பற்றி கவலைப்படவே கூடாது.. இப்படிப்பட்ட பாசிட்டிவ் மன நிலைதான் உங்களை உயரத்திற்குக் கொண்டு போகும்.

நேற்று என்பது கையிலில்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நிஜம் அதனால் நாளை வெற்றிக் கிடைக்க வேண்டுமென்றால் இன்று நிச்சயம் அதற்காகக் கடுமையாகப் போராட வேண்டும். கடந்து போன காலத்தை எண்ணிக் கவலைப்படாமல் இன்றைய நாளில் நம் இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள்.
நம்மில் பலருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருக்கும். அதை அடைய வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பே நமக்கு உயர்வைத் தரும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் நம் சாதனைகளுக்கு வித்திட வேண்டும். நான் நேற்று அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று வருந்துவதை விட இன்று நான் என் வாழ்வு சிறக்க என்ன செய்யப் போகிறேன் என்று சிந்திக்க வேண்டும்.
இன்று நாம் உழைக்கும் உழைப்பு நாளை வெற்றிக்கு அடித்தளமாகும். அதனால் போன காலத்தையோ அப்போது நடந்த நிகழ்ச்சிகளையோ எண்ணி மனம் வருந்தாமல் இன்று நாம் நம்முடைய வெற்றிக்கு என்ன செய்யப் போகிறோம் என்று யோசியுங்கள். கணவனை இழந்த பல பெண்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர்கள் இன்று போராடுகிறார்கள். நேற்று நடந்ததையெண்ணியே இருந்திருந்தால் நம்மால் இன்று சிறப்பான செயல்களைச் செய்ய முடியாது.
நேற்று என்பது கடந்தது இன்று உங்கள் கையில் நாளை எப்படியோ. அதனால் இன்று உங்கள் மனதை இனிமையாக்கி உங்களுடைய ஆற்றலின் மூலம் உங்கள் செயல்களில் ஈடுபடுங்கள். நாளைய வெற்றி உங்களுக்குத்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications