எதிர்பாராத "வாரிசு.." பிரிட்டன் மன்னர் பதவி விலகல்? அடுத்து இதுதான் நடக்கும்! நோஸ்ட்ராடாமஸ் பகீர்
லண்டன்: பிரிட்டன் குடும்பத்தில் சில வார இடைவெளியில் இரண்டு பேருக்கு கேன்சர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டறியும் ஆர்வம் இங்கே அனைவருக்கும் இருக்கத் தான் செய்யும். அப்படி எதிர்காலம் குறித்து மிக துல்லியமான கணிப்புகளை விட்டுச் சென்றவர் நோஸ்ட்ராடாமஸ், இவர் எதிர்காலத்தில் நடக்கும் பல விஷயங்களைத் துல்லியமாகக் கணித்துள்ளார்.

இதற்கிடையே இப்போது சில வார இடைவெளியில் பிரிட்டன் அரசு குடும்பத்தில் இரண்டு பேருக்கு கேன்சர் உறுதியாகி இருக்கும் நிலையில், நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கேன்சர்: பிரிட்டன் குடும்பத்தில் இப்போது இரண்டு பேருக்கு கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேன்சர் உறுதி செய்யப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சூழலில் மன்னர் சார்லஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டனுக்கும் கேன்சர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து இரண்டு பேருக்கு கேன்சர் உறுதியாகி உள்ள நிலையில், நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு மீண்டும் பேசுபொருள் ஆகி இருக்கிறது.
15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நோஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார். இவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தவர். இவர் 2024ஆம் ஆண்டு என்பது பிரிட்டன் அரசு குடும்பத்திற்குக் கடினமான காலகட்டமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இருந்தார்.
மன்னர் பதவி விலகல்: இந்தாண்டு பிரிட்டன் மன்னர் பதவி விலகுவார் என்றும் எதிர்பாராத வாரிசு மன்னர் பதவிக்கு வருவார் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்து இருந்தார். அவர் கூறியது போலவே மன்னர் சார்லஸ் கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகக் கூடும் எனச் செய்திகள் வெளியாகிறது. அவர் தானாகப் பதவி விலகுவார் அல்லது உடல்நிலை காரணமாக மருத்துவர் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.
எதிர்பாராத வாரிசு: இதில் எதிர்பாராத வாரிசு என்று நாம் இளவரசர் ஹாரியை எடுத்துக் கொள்ளலாம். சார்லஸின் மகன் தான் ஹாரி.. அப்படி இருக்கும் போது எப்படி எதிர்பாராத வாரிசு என்று இவரைப் புரிந்து கொள்ளலாம் என்ற கேள்வி வரும். பொதுவாக மூத்த வாரிசுக்குத் தான் மன்னராகப் பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப் பார்த்தால் வில்லியம்ஸ் தான் மூத்தவர். ஹாரி இளையவர்.
மேலும், ஹாரி மன்னர் குடும்பத்தில் இருந்தும் விலகி இருந்தார். இதன் காரணமாகவே நோஸ்ட்ராடாமஸ் சொல்லும் எதிர்பாராத வாரிசு ஹாரி தான் என்கிறார்கள். இளவரசர் ஹாரி மன்னர் குடும்பத்தில் இருந்து விலகினாலும் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கேத் மிடில்டன் தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், "எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எனக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தேன்.அதிலிருந்து மீண்டும் வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications