தீராத கழுத்து வலி.. சுயநினைவின்றி மயங்கி கிடந்த பாம்பே ஜெயஸ்ரீ.. லண்டன் மருத்துவமனையில் அனுமதி
லண்டன்: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ் குடும்பத்தை இவர் தனது பெற்றோரிடமிருந்தே வாய்ப்பாட்டு பாடி கற்று வந்தார். இதையடுத்து லால்குடி ஜெயராமன், டி.ஆர் பாலமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
பிறகு தண்டபாணி ஐயரிடம் வீணையையும் கற்று தேர்ந்தார். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவர் மின்னலே திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியுள்ளார்.

பிரபல பாடகி
இதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். அது போல் வெளிநாடுகளில் நடக்கும இசைக் கச்சேரிகளிலும் அவர் கலந்து கொண்டு பாடி வருகிறார்.

இசை நிகழ்ச்சி
இவர் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நிலையில் லிவர்பூல் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு அவருக்கு நேற்று இரவு முதல் அதிகமான கழுத்து வலி இருந்துள்ளது. இதனால் அவர் இன்று காலை உணவையும் மதிய உணவையும் சாப்பிட ரூமை விட்டு வரவே இல்லை.

என்ன ஆயிற்று
இதனால் அவருக்கு என்ன ஆயிற்று என அறிய ஹோட்டல் நிர்வாகி அவரது அறைக்கு சென்றார். அப்போது அவர் சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகிகள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சையா
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என தெரிகிறது. அவருக்கு உடல் நிலை சரியானதும் சென்னை வருவார் என தெரிகிறது. அனோகமாக அவர் கழுத்து வலி காரணமாக எழுந்து நடந்த போது தடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என்றும் அவருக்கு தலை பகுதியில் அடிபட்டு சுயநினைவை இழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பத்ம விருது பெற்றவர்
இவர் கொல்கத்தாவை சேர்ந்த தமிழ் குடும்பம் என்றாலும் மும்பையில் படித்ததால் இவர் பாம்பே ஜெயஸ்ரீ என அழைக்கப்படுகிறார். இவர் பரதநாட்டிய கலைஞருமாவார். சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிறைய ஆல்பங்களில் பாடல்களை பாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications