அம்மா எலிசபெத் ராணி வழியில் மக்களுக்கு சேவை- பிரிட்டன் மன்னராக பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாம் சார்லஸ்
லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று பிரகடனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிய மன்னரான மூன்றாம் சார்லஸுக்கு குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் வயது மூப்பால் காலமானார். உலகில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் 2-ம் எலிசபெத். அவரது இறுதி நிகழ்வுகள் இன்னமும் ஒருவார காலம் நடைபெறும்.
2-ம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னரானார். மூன்றாம் சார்லஸ் என பிரிட்டனின் மன்னர் இனி அழைக்கப்படுவார். மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக இன்று அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டார். இதனையடுத்து பிரிட்டன் மரபுகளின் படி குண்டுகள் முழங்க மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சபை ஆர்ச்பிஷப் ஜஸ்டின், பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின்னர் நாட்டு மக்களுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார். மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: என் தாயார் இரண்டாம் எலிசபெத் அனைவருக்கும் முன்னுதாரணமாக, உத்வேகமாக திகழ்ந்தவர். நாங்கள் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவரது வழியில் மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன்.
என் தாயார் இரண்டாம் எலிசபெத் மறைவின் துயரை உங்களுடன் பகிர்கிறேன். 70 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளுடன் தொடர்பில் இருந்தார். நாங்கள் அவர் சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறோம். ஒரு ராணியாக உலகின் பல நாடுகளுக்கு என் தாயார் சேவை செய்தார். நமது மரபுகள், வரலாறு, நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ளிட்டவை தொடர்பான மதிப்ப்புகள் எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் விசுவாசமாக இருப்பேன்.
நான் மன்னராகும் இத்தருணத்தில் மகன் வில்லியம்ஸ், வேல்ஸ் இளவரசராகிறார். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் கோமகன் பதவியேற்கிறார். இத்தருணத்தில் 2-வது மகன் ஹேரி மீதான அன்பை வெளிபப்டுத்துகிறேன். என் அம்மா செய்த அத்தனைக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இவ்வாறு பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications