"சங்க தமிழ், தங்க தமிழ், சிங்க தமிழ்".. அமெரிக்காவிலும் அடுக்குமொழியில் டி.ராஜேந்தர்.. அதே கம்பீரம்
லண்டன்: உடல்நல பாதிப்பிற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கு வீடியோ மூலம் உரையாற்றியுள்ளது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் பாண்டியராஜனின் மகன் வெளியிட்டுள்ளார்.
நடிகர் டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வயிற்றில் வலியும் இருந்தது. இதையடுத்து அவர் கடந்த மே மாதம் சென்னை போரூர் ராமசந்திராவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து டி ராஜேந்தரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து டி ராஜேந்தரின் மகன் சிம்பு அமெரிக்காவிற்கு முதலில் சென்று தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

உஷா டி ராஜேந்தர்
இதையடுத்து டி ராஜேந்தர், தனது மனைவி, மகன் குறளரசனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார. அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கியது. இந்த நிலையில் அமெரிக்காவில் சிம்பு, உஷா, டி ராஜேந்தர் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. அதில் டி ராஜேந்தரின் உடல் நலமாக இருப்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிம்பு படப்பிடிப்பு
சிம்பு படப்பிடிப்புக்காக சென்னை வந்துவிட்டார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக டி ராஜேந்தர் குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நெப்போலியனும் பாண்டியராஜனும் உள்ளார்கள். நியூயார்க் தமிழ்ச் சங்க நிகழ்வுகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
அத்துடன் தான் எங்கு இருந்தாலும் தமிழர்களின் மீதான தனது அன்பு என்றும் குறையாது. தமிழ்ச் சங்க விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் நலமுடன் இருப்பதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நான் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள் என்றார் டி ராஜேந்தர்.
|
தமிழ் மண்
மேலும் அவர் பேசுகையில் தமிழ் மண்ணில் நின்று பேசிக் கொண்டிருக்கக் கூடிய நான் தமிழ் மண்ணை சுவாசித்து, நேசித்து, பூஜித்து நாங்கள் எங்கிருந்தாலும் தமிழை நேசிப்போம். தமிழ்த்தாயை நேசிப்போம். சங்கத்தமிழை ,தங்கத்தமிழை, சிங்கத் தமிழை, அன்னை தமிழை, சென்னை தமிழை, நேசிப்போம். தமிழை நேசித்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்த நியூயார்க் மண்ணிலே இருக்கும் என்னை சந்திக்க நெப்போலியனும் பாண்டியராஜனும் வந்துள்ளார்கள். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.. என்ன ஒரு ஆதங்கம்... நேரில் வந்திருந்தால் எல்லோரையும் சந்தித்திருந்தால் ஆனந்தம்... என்றார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications