லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

Google Oneindia Tamil News

லண்டன்: இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று ஜி 7 நாடுகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

Recommended Video

    அந்த காலம் மலையேறி போய்ச்சு! G7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த China | Oneindia Tamil

    பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடங்கியதுதான், ஜி - 7 அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு, பிரிட்டனில் நடைபெற்றது.

    இதில், இந்த ஆண்டு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் தென்னாப்ரிக்கா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றன.

    Internet curbs threat to democracy, says G-7 statement

    ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் முறையில் பங்கேற்றார்.

    ஜி-7 நாடுகளும் மற்றும் இந்தியா உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் "ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவும். ஒடுக்குமுறை இல்லாமல் மக்கள் வாழ இது உதவும். இணையதள சுதந்திரத்தை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது" என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து..

    "நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அதிகரிக்கும் சர்வாதிகாரம், தலையீடு, ஊழல், பொருளாதார நெருக்கடி, தவறான தகவல்கள், ஆன்லைன் பாதிப்புகள் மற்றும் இணைய வழி தாக்குதல்கள், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட இணைய திடீர் நிறுத்தங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட தகவல்களை கையாளுதல், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்களை இப்போது நாம் எதிர்கொள்கிறோம்.

    ஆன்லைன் மற்றும் ஆப்லைனில், அனைவருக்கும் மனித உரிமை காப்பாற்றப்பட வேண்டும். ஒன்று கூடும் உரிமை, அமைப்புகளை உருவாக்கும் உரிமை, தேர்தலில் அச்சமில்லாமல் ஓட்டுப் போடும் சுதந்திரம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்." இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கை சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கியதாக கூறப்பட்டாலும், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய அரசு மோதல் போக்கில் ஈடுபடும் இந்த காலகட்டத்தில் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இன்டர்நெட் தடை விதித்ததாக மத்திய அரசு மீது விமர்சனம் உள்ள நிலையில், இதுபோன்ற அறிக்கை வெளியாகியுள்ளது.

    முன்னதாக கூட்டத்தில் பேசிய, பிரதமர் மோடி, ஜனநாயகமும் சுதந்திரமும் இந்திய நாகரீகத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார். திறந்த சமூக அமைப்புடைய நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் நடைபெறுவதை கண்டிப்பதாக மோடி கூறினார்.

    English summary
    India signs joint statement at G-7 for freedom of expression, which says ‘Internet curbs threat to democracy’.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X