பதவிக்கு வந்த முதல் நாள்.. காஷ்மீர் குறித்து பரபர! பிரிட்டன் பிரதமராக போகும் ஸ்டார்மர் என்ன சொன்னார்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் இந்தியாவுக்கும் இடையே இப்போது பெரியளவில் நல்லுறவு இல்லை. எனவே, இந்தியா பிரிட்டன் இடையேயான நல்லுறவை மீட்டு எடுப்பதே கெய்ர் ஸ்டார்மருக்கு முதல் சவாலாக இருக்கும். இந்தியாவுக்கும் தொழிலாளர் கட்சிக்கும் என்ன பிரச்சினை.. அதிருப்திக்கு என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரைப் பாகிஸ்தான் உரிமை கோருவதை இந்த பிரச்சினைக்குக் காரணமாகும்.

காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரம் என்பதே பல நாடுகளின் நிலைப்பாடு. பிரிட்டன் அரசின் நிலைப்பாடும் இதுதான். ஆனால், தொழிலாளர் கட்சி அப்படி இல்லை.. கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியாவை விமர்சித்துள்ளது.
பிரிட்டன் புதிய பிரதமர்: இப்போது தொழிலாளர் கட்சித் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் இருக்கிறார். பிரிட்டன் நாட்டில் தொழிலாளர் கட்சி வென்றுள்ள நிலையில், இந்த கெய்ர் ஸ்டார்மர் தான் பிரதமராகவும் பதவியேற்க உள்ளார்.
மோதலுக்கு என்ன காரணம்: ஆனால், இவருக்கு முன்பு ஜெர்மி கார்பின் தலைவராக இருந்த போது கடந்த 2019 செப்டம்பரில் அவசர மசோதா ஒன்றைக் கட்சிக்குள் கொண்டு வந்தது. அதில் காஷ்மீரில் சர்வதேச பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், காஷ்மீர் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுத மோதலை தடுக்கவும் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்கவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை ஜெர்மி கார்பின் சந்தித்து மத்தியஸ்தம் செய்வார் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டு இருந்தது.
உள்நாட்டு விவகாரம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து இதுபோன்ற தேவையில்லாத மசோதாவை கன்சர்வேடிவ் கட்சி கொண்டு வந்த நிலையில், இதற்கு இந்தியா மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. வாங்கி வங்கி அரசியலுக்காகவே தொழிலாளர் கட்சி இப்படிச் செய்வதாகவும் சாடியது. இதுவே இரு தரப்பிற்கும் உள்ள சிக்கலாக இருந்தது.
ஆனால், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா உடனான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை தற்போதைய தொழிலாளர் கட்சியின் தலைவரும் அடுத்த பிரதமர் பதியை ஏற்கப் போகும் ஸ்டார்மர் உணர்ந்தே இருக்கிறார். அவர் ஏற்கனவே கடந்த காலத்தில் தனது கட்சி செய்த தவறுகளைச் சரிசெய்யும் வேலைகளை ஆரம்பித்துள்ளார். தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இந்தியா உடன் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
காஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் என்பது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் அதைத் தீர்க்கும் என்றும் ஸ்டார்மர் கூறினார். மேலும் அவர், "இந்தியாவில் உள்ள எந்தவொரு சிக்கலையும் இந்திய நாடாளுமன்றம் கவனித்துக் கொள்ளும். காஷ்மீர் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டிய இருதரப்பு பிரச்சினை" என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பட்டு மாறி உள்ளது என்பது உறுதியாகியது.
மாறுமா உறவு: இது மட்டுமின்றி இந்துக்களுக்கு எதிரான ஹிந்துபோபியாவையும் அவர் பிரச்சாரத்தின் போத கண்டித்துள்ளார். மேலும், தீபாவளி மற்றும் ஹோலி போன்ற இந்து பண்டிகைகளின் கொண்டாடவும் செய்துள்ளார். தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருக்கும் போது இந்தியா- பிரிட்டிஷ் உறவு எப்படி இருக்கும் என்பதே பலரது அச்சமாக இருந்தது. ஆனால், மிகவும் சரியான பாதையில் பயணித்து இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்டார்மர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications