காலம் வேகமாக சுழலுது பாருங்க! இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களை விட.. அதிக நிலம் வாங்கிய இந்தியர்கள்
லண்டன்: லண்டனில் தற்போது ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள்தான் அதிக நிலம் வைத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுக்க பல நாடுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முக்கியமாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். கனடாவில் சிங், தமிழர்கள், அமெரிக்காவில் தெலுங்கு, தமிழர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் மலையாளிகள் என்று இந்தியர்கள்தான் எங்கே போனாலும் இருக்கிறார்கள். அதிலும் குஜராத்தியர்கள் பலர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தினம் தினம் பல நூறு பேர் இதில் கைதாகிறார்கள். உலகம் முழுக்க இப்படி பல நாடுகளில் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் லண்டனில் தற்போது ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள்தான் அதிக நிலம் வைத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது இங்கிலாந்தை சேர்ந்தவர்களை விட இந்தியர்கள்தான் அங்கே அதிகம் நிலம் வைத்து உள்ளனர். சமீபத்தில்தான் இங்கே விராட் கோலி குடியேற போவதாக செய்திகள் வந்தன.
லண்டனை சேர்ந்த கொண்ட குடியிருப்பு மேம்பாட்டாளர் நிறுவனமான பாராட் லண்டனின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், லண்டனில் உள்ள சொத்து உரிமையாளர்களின் அதிகமாக இந்தியர்கள் உள்ளனர். இந்த குழுவில் பல தலைமுறைகளாக இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய நபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) உள்ளனர். இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக்காக இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய குடும்பங்கள் அதிகம் உள்ளன.
ஆங்கிலேயர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வசிக்கும் இந்திய முதலீட்டாளர்கள் லண்டனில் அதிகம் வீடுகளை வாங்குகிறார்கள். ஒன்று, இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகள் கொண்ட சொத்துக்காக GBP 290,000 முதல் GBP 450,000 வரை செலவழிக்கத் தயாராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்கள் கூட இவ்வளவு செலவு செய்ய விரும்புவது இல்லை. புள்ளிவிபரப்படி லண்டனில் 30 சதவீத வீடுகள் விற்பனையானது வெளிநாட்டினரால் வாங்கப்படுகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்பும் இந்திய முதலீட்டாளர்கள் அதிகம். அங்கே வீடு விற்பனையில் 30 சதவீத வீடுகளை வாங்குபவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் வாங்குகிறார்கள்.
நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் சர்வேயில் 10% இந்தியாவின் பணக்கார லண்டனில் குடியேறுவதையே அதிகம் விரும்புகின்றனர். உள்நாட்டு ரியல் எஸ்டேட் சந்தையில் இந்தியர்கள் ஆதிக்கமே அதிகம் உள்ளது.
UK, UAE மற்றும் அமெரிக்காவில் அதிகமாக இந்தியர்களே நிலங்களை வாங்குகின்றனர். இந்தியர்களிடம் நிறைய சேமிப்பு உள்ளது. நிறைய நிதி உள்ளது. அவர்களின் வருமானம் அதிகம் உள்ளது. அதோடு பொருளாதார ரீதியான முடிவுகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுவே அவர்கள் லண்டனில் அதிகமாக நிலம் வாங்க காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஒரு சதுர அடி விலை லண்டனுக்கும் மும்பைக்கும் இடையே மிகவும் ஒத்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருவாய் விகிதம் மற்றும் பாதுகாப்பான சந்தை என்பதால் இந்தியாவில் நிலம் வாங்குவோர் இங்கிலாந்து குடியிருப்பு சந்தையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மும்பையில் நிலம் வாங்குவதற்கு பதிலாக அதே விலைக்கு நல்ல நிலம் மட்டுமின்றி பாதுகாப்பு, சுற்றுசூழல் வழங்கும் லண்டன் சிறந்தது என்று இந்தியர்கள் லண்டனில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications