இங்கிலாந்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓமிக்ரான் வைரஸ்.. அவசரநிலை கொண்டு வர முடிவு!
லண்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தின் மோசமான நிலை
இங்கிலாந்திலும் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது அவசரநிலை என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கிலாந்தில் ஓமிக்ரான் பரவும் வேகம் தினமும் இரட்டிப்பாகி வருகிறது. அங்கு ஒமிக்ரானின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,137 ஆக உள்ளது. கடந்த சனிக்கிழமை 1,898 ஆக இருந்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இரண்டு, மூன்று நாட்களில் இரட்டிப்பாகி உள்ளது அதிர்ச்சியை கூட்டி இருக்கிறது.

மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள்
இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது. அதன்பிறகு அங்கு ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகமாகி, ஓமிக்ரான் வைரசும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட மாதம் என்பதால் மேற்கொண்டு ஓமிக்ரான் பரவுவதை தடுக்க நாட்டில் அவசரநிலை கொண்டு வர வேண்டும் என்று அந்த நாட்டின் மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிடைத்த அனுபவம்
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக மீறப்பட்டதால் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டு மிக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்து உள்ளார். ''கொரோனா அதிவேகம் எவ்வாறு உருவாகிறது என்பதை கடந்த காலங்களில் எங்களின் கசப்பான அனுபவங்களில் இருந்து நாங்கள் பெற்றுக் கொண்டோம்'' என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
Recommended Video

பூஸ்டர் டோஸ்
''வரவிருக்கும் வாரங்களில் வைரஸின் தீவிரத்தன்மை பற்றிய தரவு தெளிவாகிவிடும். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவனைகளில் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். மேலும் இவை விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது'' நாட்டின் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த பூஸ்டர்டோஸ்களும் இன்றியமையாதவை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications