லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டன் மகாராணி எலிசபெத் 96 வயதில் காலமானார்.. பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத், இன்று அவரது 96 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்து உள்ளது.

பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக உள்ளவர் என்ற பெருமையைப் பெற்றவர் இரண்டாம் மகாராணி எலிசபெத்.

கடந்த ஆண்டு முதலே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மகாராணி எலிசபெத் இன்று தனது 96 வயதில் காலமானார்.

பிரிட்டனின் நீண்ட கால மகாராணி.. மதிப்புக்குரிய மங்கை! யார் இந்த 2ம் எலிசபெத்? முழு விவரம் பிரிட்டனின் நீண்ட கால மகாராணி.. மதிப்புக்குரிய மங்கை! யார் இந்த 2ம் எலிசபெத்? முழு விவரம்

 இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

பிரிட்டன் நாட்டின் மகாராணியாகக் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் இரண்டாம் எலிசபெத். இவர் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும் கூட சமீபத்தில் தான் கொண்டாடப்பட்டது. இருப்பினும், இவரது உடல்நிலை சில காலமாகவே தொடர்ந்து மோசமாகவே இருந்து வந்தது. இதனால் தான் மருத்துவர்கள் அறிவுரைப்படி இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து ஓய்வெடுத்து வந்தார்.

 ஸ்காட்லாந்து அரண்மனை

ஸ்காட்லாந்து அரண்மனை

இரு தினங்களுக்கு முன்னர் தான், லிஸ் டிரஸை பிரதமராக நியமிக்கும் நிகழ்வு ஸ்காட்லாந்து அரண்மனையில் நடைபெற்றது. இது தான் இவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்வு. இதுவும் கூட எப்போதும் பக்கிங்ஹாம் அரண்மனையில் தான் நடைபெறும். ஆனால், மருத்துவர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதால் தான் இந்த நிகழ்வு ஸ்காட்லாந்து அரண்மனையிலேயே நடந்து முடிந்தது.

காலமானார்

காலமானார்

இந்தச் சூழலில் இப்போது பிரிட்டன் மகாராணி எலிசபெத் இன்று காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்து உள்ளது. முன்னதாக சில மகாராணி எலிசபெத் உடல்நிலையை மோசமானதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஏற்கனவே, அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையில் அவர்களும் மகாராணி எலிசபெத்தை பார்க்க விரைந்தனர்,

 96 வயது

96 வயது

96 வயதாகும் இவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் முதலே சில மோசமான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளனர். நிற்கவும், நடக்கவும் மகாராணி எலிசபெத் சிரமப்படுவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால், புதன்கிழமை திட்டமிடப்பட்ட மீட்டிங் ரத்து செய்யப்பட்டு அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்தச் சூழலில் தான் அவர் இன்று காலமானார்.

 நெருங்கிய உறவினர்கள்

நெருங்கிய உறவினர்கள்

ராணி எலிசபெத்தின் மோசமான உடல்நிலை குறித்து அவரது நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் ஸ்காட்லாந்து அரண்மனைக்கு விரைந்து வருகின்றனர். ஏற்கனவே வாரிசு இளவரசர் சார்லஸ் (73), இளவரசி அன்னே (72), இளவரசர் ஆண்ட்ரூ (62), மற்றும் இளவரசர் எட்வர்ட் (58), ஆகியோர் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனைக்கு விரைந்தனர்.

English summary
Queen Elizabeth II isunder medical supervision: Queen Elizabeth II health latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X