பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு.. இளவரசர் ஹாரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டிஷ் அரச குடும்பத்தில், புதிய ஆண் வாரிசு பிறந்துள்ளது. இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணியின் பேரனும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த வேல்ஸ் இளவரசர் டயானாவின் மகனுமானவர் 34 வயதாகும் ஹாரி. இவருக்கும், 37 வயதாகும் மேகனுக்கும் கடந்த ஆண்டு உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Royal baby: Prince Harry wife Meghan gives birth to boy

கடந்த மே மாதம் 19ம் தேதி, இந்த திருமணம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு மே மாதம் 6ம் தேதி, இளவரசர் தம்பதி, அழகான ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் முன்னாள் நடிகையும் ஆவார்.

இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை பக்கிங்காம் அரண்மனை அறிவித்ததோடு, குழந்தை 7 பவுண்டுகள் மற்றும் 3 அவுன்ஸ் அளவு எடை உள்ளதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது 3.2 கிலோ எடை. தாயும், சேயும் நலமாக இருப்பதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது. குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்று தெரிகிறது.

வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் ட்யூக் மற்றும் அவரது குழந்தைகள், இளவரசர் ஜார்ஜ், இளவரசி கேர்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் மற்றும் இளவரசர் ஹேரி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போதைய, பிரிட்டீஷ் அரச குடும்பத்தின் ஏழாவது வாரிசு இந்த குழந்தை ஆகும்.

குழந்தை பிறப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளவரசர் ஹாரி, "நான் முதல் முறையாக தந்தையாகிய, இந்த உணர்வு மிகவும் அற்புதமாக உள்ளது. எனது மனைவி குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்.

அனைத்து பெற்றோருமே கூறுவதைப் போல, அவர்களது குழந்தைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தான். ஆனால், எனது மகன் என்னை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார். நான் விண்வெளியில் பறப்பதை போல உணர்கிறேன். நான் இதுவரை உணராத அனுபவத்தை உணருகிறேன். இந்த அனுபவத்தை இதற்கு முன்பு நான் கற்பனையும் செய்து பார்த்தது கிடையாது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெளியிட்டுள்ள ட்வீட்டில், புதிய ஆண் குழந்தை வரவுக்காக, இளவரசர் தம்பதிகளுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனிமையான தருணங்களுக்கள் தொடர உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+