தமிழ் பெண்ணை அமைச்சராக்கிய விவகாரம்.. சுற்றி நின்ற எதிர்க்கட்சிகள்! தனி ஆளாக பதிலடி தந்த ரிஷி சுனக்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரமதர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே தமிழ் பெண் சுயெல்லா பிரேவர்மேன்னை அமைச்சராக்கிய விவகாரத்தில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.
பிரிட்டன் நாட்டின் பிரமதராக இருந்த லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், அடுத்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 42 வயதான ரிஷி சுனக் நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஏற்றார். 200 ஆண்டு கால பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ரிஷி சுனக்
பிரிட்டன் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. முன்பு பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த சில தவறான முடிவுகளால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பிரதமராகப் பதவியேற்றதும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதே தனது முதல் பணி என்றும் இதற்காகக் கடினமான முடிவுகளையும் எடுக்கத் தயார் என்று கூறி இருந்தார். பதவியேற்ற நாளிலேயே முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களை நீக்கி அதிரடியும் காட்டினார்.

தமிழ் பெண்
முக்கிய துறைகளுக்கு புதிய அமைச்சர்களையும் நியமித்து வருகிறார். அப்படித்தான் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை உள் துறைக்கு அமைச்சராக (home secretary) நியமித்து உள்ளார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அமைச்சர் பதவிகள் secretary அதாவது செயலாளர்கள் என்றே அழைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதேநேரம் சுயெல்லா பிரேவர்மேன் அமைச்சராவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே அவர் லிஸ் டிரஸ் பிரதமராக இருந்த போதும் உள் துறை அமைச்சராக இருந்தவர்.

சர்ச்சை
இருப்பினும், இவர் அரசு கோப்புகளைத் தனிப்பட்ட இமெயில் மூலம் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்தது. இது பாதுகாப்பு விதிமீறல் என்பதால் எதிர்க்கட்சிகள் இவரைக் கடுமையாக விமர்சித்து இருந்தது. இதையடுத்து தனது தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது சில வாரங்கள் இடைவெளியில் சுயெல்லா பிரேவர்மேனை இப்போது ரிஷி சுனக் அமைச்சராக்கி உள்ளார்.

நாடாளுமன்றம்
இதற்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று பிரிட்டன் நாடாளுமன்ற கூடியது. ரிஷி சுனக் பிரதமராகக் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற அமர்வு இதுவாகும். இதில் சுயெல்லா பிரேவர்மேனை அமைச்சராக நியமித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், அதற்கெல்லாம் சற்றும் அசராமல் ரிஷி சுனக் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் பதில் அளித்தார்.

கேள்விகள்
அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், "பாதுகாப்பு விதிமீறலால் பதவியை ராஜினாமா செய்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்துள்ளது சரியா? சிறப்பான ஆட்சியைத் தருவேன் என்று கூறிய பிரதமராகப் பொறுப்பேற்றவர் ராஜினாமா செய்தவரை மீண்டும் அமைச்சராக்கியது தவறு. எந்தவொரு தவறுகளையும் செய்தவரைத் தான் இந்த பதவியில் நியமிக்க வேண்டும். பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ரிஷி சுனக் தேச பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளார்" என்றார்.

பதில்
இதற்குப் பதிலளித்த ரிஷி சுனக், "அவர் தெரியாமல் ஒரு தவறு செய்துவிட்டார். இருப்பினும், அதற்கு முழு பொறுப்பு ஏற்று உடனடியாக பதவியும் விலகிவிட்டார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில் எந்தவொரு தவறும் இல்லை. குற்றவாளிகளை ஒடுக்குவதிலும் நமது நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதிலும் சுயெல்லா பிராவர்மேன் கவனம் செலுத்துவார். நீங்கள் (தொழிலாளர்) எப்போதும் குற்றவாளிகளை ஒடுக்கத் தவறுவதை மறந்துவிட வேண்டாம்" என்றார்.

சுயெல்லா பிரேவர்மேன்
இதற்கு முன்பு பிரதமராக இருந்த லிஸ் டிரஸின் பொருளாதார கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தவர் சுயெல்லா பிரேவர்மேன். மேலும், ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் முதன்மையானவர் இவர் ஆவார். சுயெல்லாவின் தந்தை கோவாவைச் சேர்ந்தவர். அதேபோல அவரது தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications