லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடச்சீ! இதுல கூட பொய் சொல்லுவாங்களா.. கேன்சர் என கூறி பணத்தை அபேஸ் செய்த பெண்.. டென்ஷனான ஜட்ஜ்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பொய்யைக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

பொதுவாக இணையதளங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் பார்த்து இருக்கக் கூடும்.

சில சமயங்களில் இதுபோன்ற கோரிக்கைக்குச் செவி சாய்த்து நம்மிடம் இருக்கும் சிறு தொகையை அவர்களுக்கு உதவக் கொடுத்து இருப்போம்! அல்லது அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டி இருப்போம்.

 பிரிட்டன்

பிரிட்டன்

ஆனால், பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பொய்யைக் கூறி உள்ளார். யார் அவர்? அப்படி என்ன தான் செய்தார்? எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.. இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியில் வசிக்கும் 44 வயதான பெண் நிக்கோல் எல்கபாஸ். சூதாட்டத்திற்கு அடிமையான இவருக்கு ஊர் சுற்றுவதும் ரொம்ப பிடிக்குமாம். கையில் இருந்த அனைத்து காசையும் சூதாட்டத்திலேயே அவர் காலி செய்துவிட்டார்.

கேவலம்

கேவலம்

இவ்வருத்து பழக்கத்தை அறிந்த நண்பர்கள் கடன் தரவும் முன்வரவில்லை. எப்படிப் பணம் சம்பாதிக்க என யோசித்த அவர், கடைசியில் எடுத்த ரூட் ரொம்ப கேவலமானது. அதாவது தனக்கு மோசமான கேன்சர் நோய் இருப்பதாகச் சொல்லிக் கொண்ட அவர், தனக்கு மக்கள் பணம் கொடுத்த உதவ வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸும் இருந்துள்ளது.

 உதவி

உதவி

ஏனென்றால் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் நிக்கோல் இதுபோல பதிவிட்டு இருந்தார். அந்தச் சமயத்தில் கிரவுட் சோர்ஸ் முறையில் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்தன. இதனால் நிக்கோலின் விளம்பரத்தை யாரும் சந்தேகிக்கவில்லை. முதலில் அவருக்கு உதவிகள் பெரியளவில் குவியவில்லை என்றாலும் கூட சிறுக சிறுக பலரும் அவருக்கு நன்கொடை அளித்துள்ளனர். மொத்தம் அவருக்கு 700 பேர் காசு கொடுத்து உதவி உள்ளனர்.

 கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய்

இது தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தப் பெண் தனக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பதாக மக்களிடம் பொய் சொல்லி, கிரவுட் ஃபண்டிங் இணையதளம் மூலம் ரூ. 43 லட்சம் நிதி திரட்டினார். அதாவது தனக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பதாகவும் இதற்கு ஆப்ரேஷன் செய்ய ஸ்பெயின் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மொத்தம் 700 பேர் அவருக்குச் சிகிச்சைக்காக உதவி உள்ளனர்.

 சூதாட்டம்

சூதாட்டம்

பணம் கிடைத்த உடனேயே அந்த பணத்தை வைத்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இன்ப சுற்றுலா, ஷாப்பிங் எனப் பணத்தைச் செலவழித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அவரது பொய்கள் தெரிய வரவே, நிக்கோல் மீது பாய்ந்தது வழக்கு. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்டில் அவர் கூறிய பதில் நீதிபதியையே டென்ஷன் ஆக்கிவிட்டது.

ஜெயில்

ஜெயில்

அதாவது மருத்துவமனைக்கு எல்லாம் செல்லாமல் அவரே தனக்குப் புற்றுநோய் என்று நினைத்த விட்டாராம். அதனால் தான் உதவி கோரி விளம்பரம் கொடுத்தாராம். மேலும், போலீஸ் தரப்பில் நடத்திய விசாரணையில் நிக்கோல் எல்கபாஸ் எந்தவொரு மருந்து அல்லது சிகிச்சையை எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து இப்போது அவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

English summary
England women collects money by faking cancer: (கேன்சர் என்று பொய் கூறி காசை மோசடி செய்த பெண்) England women arrested for faking her illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X