வெற்றிகரமான தடுப்பூசி இருக்கு.. ஆனாலும் டெல்டாவுடன் போராடுவது ஏன்? வல்லரசுகளை கலங்க வைத்த ரிசல்ட்
லண்டன்: ஏன் வெற்றிகரமான தடுப்பூசி கண்டுபிடித்த நாடுகள் கூட டெல்டாவுடன் போராடுகின்றன என்று தெரியுமா? இந்த விஷயத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் தடுப்பூசி போட்டவர்களை மெதுவாக பாதிக்கும் கொரோனா அவர்கள் மூலம் தடுப்பூசி போடாதவர்களை மோசமாக பாதிக்கிறது. இது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே உலக நாடுகளின் சிக்கலுக்கு காரணம்.
புதிய ஆராய்ச்சியின் படி, கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும், தங்கள் வீட்டில் உள்ள தடுப்பூசி போடாதவர்களுக்கு, அல்லது தங்களை சுற்றியுள்ள தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனாவின் டெல்டா வேரியண்ட் வைரஸை பரப்ப வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
லான்செட் தொற்று நோய்கள் மருத்துவ இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, லேசான கொரோனா பாதிப்புடன் இருந்த 621 பேரிடம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்பட்ட வீட்டுத் தொடர்புகளில் 25% பேர் நோயைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் தடுப்பூசிகள் இல்லாதவர்களில் 38% பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவாது தடுப்பூசி போட்டவர்களால் நோய் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அந்தரத்தில் தொங்கி கொண்டே அலறிய சிறுவன்.. இப்படியும் ஒரு ஸ்கூல் டீச்சரா.. பகீரை கிளப்பும் வீடியோ

பாதிப்பு அதிகரிக்கும்
வெற்றிகரமான தடுப்பூசிகள் உள்ள நாடுகளில் கூட டெல்டா பிளஸ் கொரோனா ஏன் மிகவும் தொற்றுநோயாக இருக்கிறது என்பதையும், தடுப்பூசி போட்டவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை, தடுப்பூசி போடாதவர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கடுமையான நோய்
ஆய்வின் படி தடுப்பூசி போடப்பட்டவர்கள் மிக விரைவாக நோய் பாதிப்பில் இருந்து மீண்டு, லேசான நோய் பாதிப்புகளை மட்டுமே கொண்டிருந்தனர், அதே நேரத்தில் தடுப்பூசி போடப்படாத மற்ற வீட்டு உறுப்பினர்கள் கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது.

தடுப்பூசி கட்டாயம்
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய்களின் பேராசிரியர் அஜித் லால்வானி கூறும் போது, "டெல்டா பிளஸ் வைரஸில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. ஏனெனில் அது வீடுகளில் பரவுகிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே நாம் காணும் தொடர் பரவல், தடுப்பூசி போடாதவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது கட்டாயம் என்பதை உறுதி செய்கின்றன என்றார்.

சுவாச குழாய்
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க தடுப்பூசி கண்டறியப்பட்டது . இந்நிலையில் 40% முதல் 50% வரை தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மேல் சுவாசக் குழாயில் வைரஸ் சுமை குறைவாக இருந்தது. இருப்பினும், டெல்டா மாறுபாடு சில காலமாக உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் நோயாக உருவெடுத்துள்ளது-

மூன்றாவது டோஸ்
முழுமையான தடுப்பூசி மூலம் பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களுக்குள் குறைந்துவிட்டதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. இது இங்கிலாந்தின் பூஸ்டர் கொள்கையில் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை வழங்க போதுமான தரவு இல்லை என்று ஆராய்ச்சி குறித்து பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் தற்போது மூன்றாவது டோஸ் வேக்சின் வயதான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அவர்களின் இரண்டாவது ஷாட் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது.

கூடுதல் ஷாட்கள்
இந்நிலையில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும் ஆய்வின் ஆய்வாளருமான நீல் பெர்குசன் கூறும் போது, பூஸ்டர் டோஸ்கள் ஆறு மாதங்களுகக்கு போட்டால் நன்றாக இருக்கும் என்று சில ஆய்வுகளை நம்பி வழங்கப்படுகிறது. ஆனால் ஆறுமாதம் முன்பே டோஸ் வழங்கப்பட்டால் அவை குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. பூஸ்டர் திட்டம் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உதவும், ஏனெனில் கூடுதல் ஷாட்கள் வழங்கப்பட்டால் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளிடம் இருந்து நீண்ட நோயெதிர்ப்பு நினைவகத்திற்கு வழிவகுக்கும். இது ஒரு வருடம் வரை மக்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த கூடுதல் தகவல்கள் தேவை" இவ்வாறு கூறினார்.