ஒரு மணி நேரத்தில் 31 பேர் பலி.. உ.பியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகள்.. பெரும் சோகம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
விபத்து நடந்த பகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சர்கள் மீட்பு பணியை நேரில் இருந்து துரிதப்படுத்தியுள்ளனர்.

உயிரிழப்பு
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாக சாலை விபத்துக்களில் காயமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கைதான் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் மேலும் சில சாலை விபத்துக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளன.

பக்தர்கள் பலி
நேற்றிரவு நடைபெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேற்றிரவு உன்னாவில் உள்ள சந்திரிகா தேவி கோயிலிலிருந்து 50 பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று கட்டம்பூர் பகுதியில் வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள குளத்தில் அது கவிழ்ந்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் என சம்பவ இடத்திலேயே சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு விபத்து
20 பேர் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து செயல்படாத காரணத்தினால்தான் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்து ஒரு சில நிமிடங்களில் அஹிர்வான் மேம்பாலம் அருகே மற்றொரு விபத்தும் நடந்துள்ளது.

நிவாரணம்
ஆட்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருக்கையில் அதன் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்
சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இரண்டு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினார். டிராக்டர்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தின் போக்குவரத்து பாதுகாப்பு வசதி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications