மனுஷனாய்யா நீயெல்லாம்.. பிஞ்சுயா அது! ஆசிரியர் செய்யும் வேலையா இது? பள்ளியில் நடந்த ஷாக் சம்பவம்!
லக்னோ : பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீறும் சம்பவங்களால் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் உபியில் அரங்கேறியுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் காதல் கடிதம் எழுதியதோடு, அப்பெண்ணின் பெற்றோரையும் மிரட்டியிருக்கிறார்.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை விட இந்த வகையான கொடூரங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்
சிறுமிகளை தெரியாதவர்கள், உறவினர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தால் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் அவர்கள் நம்பி அனுப்புவது பள்ளிகளுக்குத்தான். ஆனால் பள்ளிகளுக்குள் இருக்கும் ஆசிரியர்களே சில நேரங்களிலும் பிஞ்சு மழலைகளிடமும், சிறுமிகளிடம் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் உத்திர பிரதேசத்தில் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி ஆசிரியர்
அம்மாநிலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் காதல் கடிதம் எழுதியதோடு, அப்பெண்ணின் பெற்றோரையும் மிரட்டியிருக்கிறார். உத்திரபிரதேச மாநிலத்தில் கண்ணுஜ் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 47 வயதான ஹரி ஓம் சிங் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவர்தான் மாணவிக்கு காதல் கடிதம் எழுதி தற்போது காவல்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியிருப்பவர்.

காதல் கடிதம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி ஒருவருக்கு கடிதம் ஒன்றை அந்த ஆசிரியர் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி அது என்ன என கேட்டவுடன் வீட்டுக்குச் சென்று இதை படித்துப் பார் .படித்தவுடன் அதனை யாருக்கும் தெரியாமல் கிழித்து எரிந்து விட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது வீட்டுக்கு சென்று அந்த கடிதத்தை படித்துப் பார்த்தபோது மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்.

காதல் வரிகள்
ஹரி ஓம் சிங் எழுதிய அந்த கடிதத்தில் நான் உன்னை காதலிக்கிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.. விடுமுறை நாட்களில் நீ இல்லாத போது உன்னை நினைத்து நான் மிகவும் கவலை அடைந்து இருக்கிறேன்.. மேலும் கிடைக்கும் போது என்னை தொடர்பு கொண்டு நீ பேச வேண்டும் முடிந்தால் நேரில் வந்து சந்திக்க வேண்டும்.. நீ என்னை உண்மையாக காதலித்தாய் என்றால் நிச்சயம் வந்து பார்ப்பாய் என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடிதத்தை படித்தவுடன் கிழித்து விடவும் எனவும் அவர் எழுதியிருக்கிறார்.

சஸ்பெண்ட்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது ஆசிரியரே தனக்கு காதல் கடிதம் குடுத்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதை அடுத்து அவர்கள் ஆசிரியர் ஹரி ஓம் சிங்கிடம் கேட்டபோது அவர் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கடுமையான பின் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் எனவும் மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications