Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என்ன தைரியம்.." எம்எல்ஏவை நடுரோட்டில் கொன்ற ரவுடி! கடைசி சாட்சியையும் விட்டுவிக்கவில்லை! கொடூரம்

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் ரவுடி அடிக் அகமதுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீஸார் ஆதாரங்களைச் சேகரித்து வந்தனர்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ கொலை வழக்கில் கடைசி சாட்சியாக இருந்த நபரையும் பட்டப்பகலில் மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர்.

போலீஸ் பாதுகாப்பையும் மீறி, சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் இந்த துணிகரக் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

சிறையில் இருக்கும் அந்த ரவுடியின் உத்தரவின் பேரில்தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 உபியை கலக்கிய பயங்கர ரவுடி

உபியை கலக்கிய பயங்கர ரவுடி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அடிக் அகமது (52). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. தனது எதிரிகளை மிகவும் கொடூரமாகக் கொலை செய்வது அடிக் அகமதின் பாணி எனக் கூறப்படுகிறது. ரவுடியாக இருந்தபோதே, அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 நடுரோட்டில் வெட்டி கொலை

நடுரோட்டில் வெட்டி கொலை

இதனிடையே, கடந்த 2005-ம் ஆண்டு தனது தம்பி அஷ்ரஃபை, எம்எல்ஏ தேர்தலில் அடிக் அகமது நிற்கச் செய்தார். தன்னை எதிர்த்து யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என அடிக் அகமது எண்ணினார். ஆனால், பகுஜன் சமாஜ் சார்பில் ராஜு பால் என்பவர் அதே தொகுதியில் போட்டியிட்டு அஷ்ரஃபை தோற்கடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அடிக் அகமது, எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ராஜு பாலை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இது, உத்தரப்பிரதேசத்தில் அந்தக் காலகட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 சிறைக்கு தள்ளிய ஆட்சி மாற்றம்

சிறைக்கு தள்ளிய ஆட்சி மாற்றம்

இந்த வழக்கில் அடிக் அகமது, அவரது தம்பி அஷ்ரஃப் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், சமாஜ்வாதி ஆட்சி நடைபெற்றதால் அவர் ஜாமீனில் சுதந்திரமாகவே நடமாடி வந்தார். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக அடிக் அகமது மீதான வழக்கு விசாரணைகள் வேகம் எடுத்தன. அவரது பல சொத்துகளை அரசு கைப்பற்றியது. ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டிருந்த அவருக்குச் சொந்தமான வீடு, ஹோட்டல்கள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் ஆத்திரத்தில் இருந்த அடிக் அகமது, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாகத் திட்டி வந்தார். அரசியல் ரீதியாகத் தான் பழிவாங்கப்படுவதாகவும் அவர் கூறி வந்தார்.

 கடைசி சாட்சியும் கொலை..

கடைசி சாட்சியும் கொலை..

இதனிடையே, பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் ரவுடி அடிக் அகமதுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் போலீஸார் ஆதாரங்களைச் சேகரித்து வந்தனர். இந்த கொலையில் கடைசி சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். எப்போதும் அவருடன் இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை பிரக்யராஜில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்த உமேஷ் யாதவை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அவர்களைப் பிடிக்க முயன்ற இரண்டு போலீஸார் மீதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் மீது வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.

 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள்

10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள்

இந்த சம்பவத்தில் உமேஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு போலீஸாரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருக்கும் ரவுடி அடிக் அகமதுவின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+