‛மதுரா கிருஷ்ணஜென்ம பூமியில் கோவிலை இடித்த அவுரங்கஷீப்’.. RTI கேள்விக்கு தொல்லியல் துறை பரபர பதில்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா கிருஷ்ணஜென்மபூமியில் கேஷவ்தேவ் கோவில் முகலாய மன்னரான அவுரங்கஷீப்பால் இடிக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளது. ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை இந்த பதிலை அளித்துள்ளது.
பாபர் மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து மசூதியின் ஒருபகுதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கி உள்ளனர்.

அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் மதுரா என்பது கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு கேஷவ் தேவ் கோவில் இருந்ததாகவும், அது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கடந்த 1669-79 காலக்கட்டத்தில் இடித்து ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதியில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எதிர் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே தான் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் இந்திய தொல்லியல் துறையிடம்(ஏஎஸ்ஐ) கேள்வி கேட்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தை சேர்ந்த அஜய் பிரதாப் சிங் இந்த கேள்வியை கேட்டார். அதன்படி இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா பிரிவு கண்காணிப்பாளர் முக்கிய தகவல்களை வழங்கி உள்ளார்.
அதில் முகலாய மன்னர் அவுரங்கஷீப் கேசவ்தேவ் கோவிலை அகற்றியது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கத்ரா மேடு நசுல் குத்தகைதாரர்களிடம் இல்லை. அதன்மீது கேஷவ்தேவ் கோவில் இருந்தது. கிருஷ்ணஜென்ம பூமியின் ஒருபகுதியான அந்த கோவில் அகற்றப்பட்டு அவுரங்கஷீப்பால் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தற்போது கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி பிரச்சனை தொடர்பான வழக்கில் இந்த தகவல் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இந்த தகவலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்களில் முன்வைப்போம் என்று கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications