பல்லாங்குழி ரோடு..உபியில் வேகமாக வந்த விஐபி கார்.. வழி கொடுத்து அப்படியே கவிழ்ந்த ஆட்டோ.. வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் குண்டும், குழியுமான ரோட்டில் விஐபி ஒருவர் காரில் செல்லும் நிலையில் அவரை தொடர்ந்து பாதுகாவலர்கள், ஆதரவாளர்கள் காரில் செல்கின்றனர். இந்த வேளையில் விஐபி வாகனத்துக்கு வழி விட முயன்றபோது ரோட்டில் உள்ள பள்ளத்தில் பொதுமக்களுடன் ஆட்டோ ஒன்று கவிழ்ந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பொதுமக்களுக்கு தரமான ரோடுகள் அமைத்து கொடுப்பதாகும்.
பல இடங்களில் ரோடுகள் புதிதாக போடப்பட்டாலும் கூட அது தரமற்றதாக அமையும் பட்சத்தில் உடனடியாக சேதமடைந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் ரோடு சேதம் என்பது அதிகரித்து வருகிறது.

உயிரிழப்பு சம்பவம்
இதன்மூலம் அரசின் நிதிகள் வீணடிக்கப்படுவதுடன், பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் அதிகளவில் சிரமத்தை சந்திக்கின்றனர். அதோடு டூவீலர்களில் செல்லும் நபர்கள் குண்டு குழியுமான ரோட்டால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும், காயம் அடையும் சம்பவமும் கூட அவ்வப்போது நடப்பது சோகமான விஷயமாகும்.

வெளியான வீடியோ
இதனால் தான் ஒவ்வொரு அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் கூட ரோடுகளை தரமாக போட்டு கொடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் உள்ள ரோடுகள் தொடர்ந்து குண்டும், குழியுமாக தான் இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச விஐபி பயணம்
இந்த வீடியோவானது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலமன உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூரில் அமைந்துள்ள ரோடு பள்ளங்கள் நிறைந்து பல்லாங்குழி போல் மிகவும் மோசமான வகையில் காட்சியளிக்கிறது. இந்த ரோட்டில் விஐபி ஒருவர் காரில் செல்ல அவரை பின்தொடர்ந்து பாதுகாவலர்கள், அவரது ஆதரவாளர்கள் காரில் செல்கின்றனர்.

கவிழ்ந்த ஆட்டோ
அப்போது எதிர்புறத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. எதிரே விஐபிக்களின் கார்கள் அணிவகுத்து வருவதால் ஆட்டோ டிரைவர் அதில் இருந்து விலகி செல்ல முயன்றார். அப்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் இறங்கியது. இதனால் அடுத்த நொடியில் ஆட்டோ கவிழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று மக்களை மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ரோடுகளை முறையாக அரசு சரிசெய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications