டீ விற்றவர் மகனையே பிரதமராக்கியிருக்காங்க.. இது முடியாதா.. பாஜக கூட்டணி கட்சி தலைவர் பேச்சை பாருங்க
லக்னோ: ‛‛டீ விற்ற சாதாரண நபரின் மகனை பிரதமராக்கிய பாஜகவால், எங்களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்க முடியும்'' என உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் உள்ள நிசாத் கட்சி தலைவர் சஞ்சய் நிசாத் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று 6ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் போட்டியில் உள்ளார். அதாவது யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று தான் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

இதுவும் முடியும்
இதையடுத்து நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். ‛பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் உங்கள் கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா' என்று வினவினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், ‛‛டீ விற்ற சாதாரண நபரின் மகனை பாஜகவால் பிரதமராக்க முடியுமானால் எங்களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்க முடியும்'' என்றார். இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் நிசாத் கட்சி பாஜகவிடம் இருந்து அமைச்சர் பொறுப்பை எதிர்பார்ப்பது உறுதியாகி உள்ளது.

யார் இவர்
சஞ்சய் நிசாத் எனும் இவர் நிர்பால் இந்தியன் சோஸ்டி ஹமாரா ஆம் தால் எனும் கட்சியின் (நிசாத்) நிறுவன தலைவர் ஆவார். இந்த கட்சியின் சுருக்கம் தான் நிசாத். இந்த கட்சியை அவர் 2013ல் ஆரம்பித்தார். இவர் உத்தர பிரதேசத்தில் துணை முதல்வர் பதவி கேட்டு வந்தார். இதற்கு பாஜக உடன்படவில்லை. இதையடுத்து அவரை உத்தர பிரதேசத்தின் சட்ட மேலவை உறுப்பினராக(எம்எல்சி) ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்
சஞ்சய் நிசாத் எனும் இவர் நிர்பால் இந்தியன் சோஸ்டி ஹமாரா ஆம் தால் எனும் கட்சியின் (நிசாத்) நிறுவன தலைவர் ஆவார். இந்த கட்சியின் சுருக்கம் தான் நிசாத். இந்த கட்சியை அவர் 2013ல் ஆரம்பித்தார். இவர் உத்தர பிரதேசத்தில் துணை முதல்வர் பதவி கேட்டு வந்தார். இதற்கு பாஜக உடன்படவில்லை. இதையடுத்து அவரை உத்தர பிரதேசத்தின் சட்ட மேலவை உறுப்பினராக(எம்எல்சி) ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 10ல் முடிவு
உத்தர பிரதேசத்தில் மார்ச் 7 ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்ட தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications