போலீஸ் ரெய்டில் உயிரிழந்த தொழிலதிபர்.. மனைவிக்கு அரசு வேலை.. 10 லட்சம் நிவாரணம்.. உபி முதல்வர்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய ரெய்டின் போது மர்மமான முறையில் உயிரிழந்த கான்பூர் தொழிலதிபரின் குடும்பத்தினரை முதல்வர் யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தொழிலதிபரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் 10 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் மனிஷ் குப்தா.. 38 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.. கோரக்பூரில் உள்ள லாட்ஜில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் திடீரென இறந்துவிட்டதாக கூறப்பட்டது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் இருந்தால், கீழேவிழுந்து அடிபட்டு இறந்ததாக போலீசார் காரணம் சொன்னார்கள்..

மர்ம மரணம்
ஆனாலும் அந்த மர்ம மரணம் பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியபடியே இருந்தது. இந்நிலையில், தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது, தொழிலதிபர் மனிஷ்குப்தா, கான்பூரை சேர்ந்தவர்.. இவரது நண்பர் சந்தன் சைனி என்பவர் கோரக்பூரில் உள்ளார்.. மேலும் ஹர்தீப் சிங், சவுகான் போன்ற நண்பர்களை நீண்ட காலம் கழித்து தொடர்பில் வந்துள்ளனர்

போலீசார்
அதனால், நண்பர்கள் அனைவரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.. இதற்காகவே தொழிலதிபர் கோரக்பூரில் சென்று அங்கு லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார். நண்பர்களும் தொழிலதிபரை வந்து சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.. சம்பவத்தன்றும் லாட்ஜுக்கு வந்து பேசியுள்ளனர்.. மறுநாள் அனைவரும் பிக்னிக் போகவும் முடிவாகி உள்ளது.. நண்பர்கள் அனைவரும் ரூமை விட்டு சென்றபிறகு, போலீஸ் லாட்ஜை வழக்கம்போல சோதனை செய்ய வந்துள்ளது..

தகராறு
சந்தேகத்துக்கிடமானவர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்காணித்து வந்தது.. அப்போதுதான் நடுராத்திரி தொழிலதிபர் ரூமுக்குள் சென்றுள்ளனர். அத்துமீறி சோதனை செய்துள்ளனர்.. இதை தட்டி கேட்டதால்தான் தகராறு வெடித்துள்ளது.. அடித்தே அவரை போலீசார் கொன்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது, தொழிலதிபர் தலையில் ரத்த காயம் இருந்ததாகவும், அவரை அந்த ரூமை விட்டு இழுத்து வந்தபோது நேரில் பார்த்ததாகவும் அவரது நண்பர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்

மனைவி கதறல்
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையானதால் , ரெய்டு என்ற பெயரில் லாட்ஜுக்குள் நுழைந்த போலீசார் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொழிலபதிர் மனிஷின் மனைவி மீனாட்சி, தன் கணவரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். கோரக்பூர் போலீசார் தன் கணவரை கணவரை அடித்து கொன்றுள்ளனர் என்றும், லாட்ஜ் ஊழியர்கள் ரத்த கறையை துடைத்து கொலையை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

அரசு வேலை உறுதி
தொழிலதிபர் மனிஷ் மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றிய கோரக்பூர் மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த மர்ம மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யா நாத் உத்தரவிட்டுள்ளார். கோரக்பூரில் போலீசார் நடத்திய ரெய்டின் போது மர்மமான முறையில் உயிரிழந்த கான்பூர் தொழிலதிபர் மனிஷ்குப்தா குடும்பத்தினரை முதல்வர் யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தொழிலதிபரின் மனைவி மீனாட்சிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் 10 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications