மாணவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்தக்கூடாது! பட்டமளிப்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: மாணவர்கள் குறுக்குவழியை பயன்படுத்தக்கூடாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். பென்னட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பென்னட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் பேசிய அவர், “மாணவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் முழுமையாக பேசியதாவது, “இலக்கை அடைவதற்கு மாணவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். குறுக்கு வழி மூலம் உங்களுக்கு உடனடியாக பலன்கள் கிடைக்கலாம். ஆனால் அது நீடித்து இருக்காது.
மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். உங்களுக்காக இந்த அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. நீங்கள் இங்கு கற்க வேண்டியது நேர்மை மட்டுமே. நேர்மை இருந்தால்தான் எங்கு சென்றாலும் உங்களால் தனித்து தெரிய முடியும். அதான் உங்களை அடையாளப்படுத்தும்” என்று கூறியுள்ளார். மேலும் பென்னட் பல்கலைக்கழகம் உலக தரத்தில் உயர்ந்திருப்பதாகவும், இதற்காக உழைத்த அத்துனை பேருக்கும் நன்றியை உரித்தாக்கிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசு தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய யோகி ஆதித்யநாத், அரசு எந்திரத்தில் எதிர்காலத்தில் பணியாற்ற உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications