குவிந்து வரும் முதலீடுகள்.. 'ஷார்ப்பாக' இருக்கும் சட்டம் ஒழுங்கு! உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏற்ற இடமாக உத்தரப் பிரதேசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தனது முழு கவனத்தையும் உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகள் மீது திருப்பியுள்ளது. புதிய திட்டங்களை அறிவிப்பது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைப்பது என பாஜக பிஸியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று கோரக்பூர் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் செக்டார் 27ல் ரூ.1,071 கோடியில் அமைய உள்ள பெப்சிகோ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளரா பங்கேற்று அடிக்கல் நாட்டியிருந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏற்ற இடமாக உத்தரப் பிரதேசம் இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் மாஃபியாக்களின் மாநிலமாக இருந்தது. ஆனால் தற்போது இந்நிலைமை மாறியிருக்கிறது. இந்த மாஃபியாக்கள் தற்பொது உயிருக்கு பயந்துக்கொண்டிருக்கிறார்.
நீதிமன்றம் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. எனவே முதலீட்டாளர்களுக்கு மாநிலத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதலீடுகளும் குவிந்து வருகின்றன. இந்த முதலீடுகளில்தான் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. உத்தரப் பிரதேசம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றதிற்கு சட்டம் ஒழுங்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஏனெனில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் முதலீட்டாளர்கள் மாஃபியாக்களால் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் இன்று மாஃபியாக்கள் இருக்கும் இடம் தெரியவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராமநவமியன்று கலவரங்கள் ஏற்பட்டன. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் எந்த கலவரமும் ஏற்படவில்லை. அன்று மட்டும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உத்தரப் பிரதேசத்திற்கு வந்தனர். இருப்பினும் எந்த வித கலவரமும் இங்கு ஏற்படவில்லை. ராமரின் படங்கள் மற்றும் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அவர்கள் மீது இந்துக்களும், இஸ்லாமியர்களும் பூக்களை தூவி வரவேற்றனர். ஒரு காலத்தில் இந்த பண்டிகையின்போது குண்டு வெடிப்புகள் நடந்தன. ஆனால் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
உத்தர் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை அண்டை மாநிலங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகளை யோகி ஆதித்யநாத் நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications