மாமனார் தொகுதியில் மருமகள்.. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளராக அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ்
லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் காலமான நிலையில் அவர் எம்பியாக இருந்த மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.
வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்த இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகியடியே இருந்து வந்தார்.

உடல்நலக்குறைவு
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முலாயம் சிங் மரணம்
முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி காலை காலமானார்.

காலியான தொகுதி
இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் எம்.பியாக பதவி வகித்து வந்த மெயின்புரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெயின்புரி மக்களவைத் தொகுதியில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மெயின்புரி தொகுதி
இந்த நிலையில் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக அதன் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் இந்த மெயின்புரி தொகுதியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என அக்கட்சி நம்புகிறது.

சமாஜ்வாடியின் கோட்டை
இந்த மெயின்புரி தொகுதிக்கு கீழ் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகள் சமாஜ்வாடி வசம் உள்ளன. ஒரு தொகுதியில் அகிலேஷ் யாதவும் மற்றொரு தொகுதியில் சிவ்பால் யாதவும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகிறார்கள். முலாயம் சிங் யாதவ் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் இப்பகுதி மக்கள் டிம்பிள் யாதவுக்கு வாக்களிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிம்பிளுக்கு வெற்றி வாய்ப்பு
முலாயம் சிங் யாதவின் அரசியல் குருவாக கருதப்படும் நாது சிங்கின் மகனும் சட்டம் மேலவை உறுப்பினருமான சுபாஷ் சந்திர யாதவ் இதுகுறித்து பேசுகையில், "நேதாஜியையும் சமாஜ்வாடியை பின்பற்றி, டிம்பிள் யாதவ் இந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றியை பெறுவார். மெயின்புரி மக்கள் நேதாஜியின் வழியில் நடப்பவர்கள். இது பாஜவுக்கு சவாலான தேர்தலாக இருக்கும்." என்றார்.

பாஜக வேட்பாளர் யார்?
அதே நேரம் பாஜக சார்பில் பிரேம் சிங் சக்யா, பிரதீப் சவுஹான், பிரேம்பால், சதீஷ் பால் மற்றும் ரகுராஜ் சக்யா ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து பாஜக மாவட்டம் தலைவர் பிரதீப் சவுஹான் தெரிவிக்கையில், இப்பகுதியில் சமாஜ்வாடி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி வெற்றிபெற்று வந்தது. ஆனால், இனி அதுபோல் நடக்காது. வலுவான வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்வோம்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications