ஆசிரமத்தில் தங்க வந்த பெண் "சாமியார்".. கூட்டு வன்கொடுமை செய்த "சீடர்கள்".. உ.பியில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சன்யாசி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆசிரமத்தின் குருவிடம் தெரியப்படுத்திய நிலையில், அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆசிரமத்திலேயே கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்திருப்பது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆசிரமம்

ஆசிரமம்

சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "பாதிக்கப்பட்ட பெண் முன்பு மதுராவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த மோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண் சன்யாசிக்கும் இவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் தனது குரு இருப்பதாகவும் அங்கு நல்ல வசதிகளுடன் ஆசிரமம் இருப்பதாகவும் மோனா கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்னோ சென்றுள்ளனர்.

சன்யாசி

சன்யாசி

அங்குள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். அப்போது மோனாவின் சகோதரருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பியுள்ளார். 50 வயது பெண் சன்யாசி மட்டும் லக்னோ ஆசிரமத்தில் தனியாக இருந்துள்ளார். இவ்வாறு இருக்கையில், கடந்த 4ம் தேதி ஆசிரமத்தின் உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. கண் விழித்து பார்த்தபோது நிர்வாணமாக இருந்துள்ளார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

தான் குருவின் சீடர்கள் நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஆசிரமத்தின் குருவிடம் புகார் அளிக்கையில் குரு, உயிர் மீது பயம் இருந்தால் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் தைரியமாக காவல்துறையை நாடியுள்ளார் அந்த சன்யாசி" என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

 மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் இதேபோன்று பல சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்னர் சின்ஹாட்டில் பகுதியில் இதேபோன்று இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். சம்பவம் நடந்த அன்று இளம்பெண் தனது வீட்டிற்கு வருவதற்கு சின்ஹாட்டில் இருந்து ஆட்டோ பிடித்துள்ளார். ஆட்டோவில் ஓட்டுநருடன் அவரது கூட்டாளி ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவை வேறு பாதைக்கு திருப்பி அந்த இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+