மதம் மாறி காதல் திருமணம் செய்த மகள்.. கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. உ.பி.யில் வெறிச்செயல்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவரை மதம் மாறி திருமணம் செய்துகொண்ட தனது மகளை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டில் வைத்து கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இருப்பினும், நாகரீகமான இந்ச சமுதாயத்தில் ஆணவக் கொலை சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் ஆணவக் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலித்து திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரக்ஷா பந்தன் நாளன்று தனது தாய் வீட்டுக்கு வந்த மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தையின் கொடூரச் செயல் அதிரவைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் தாக்கூர். இவரது மகள் பாரூல் (30). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்து திருமணம் கொண்டார். இந்த திருமணத்துக்கு பாரூலின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரூல் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார். மகளைப் பார்த்ததும் சுரேந்தர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். அப்போதும், பாரூல் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டது குறித்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு ஒருகட்டத்தில் முற்றியுள்ளது.
ஆத்திரமடைந்த சுரேந்திர சிங் பேசிக் கொண்டிருக்கும்போதே தனது மகள் பாரூலைக் கோடாரியால் அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பாரூல் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாரூலின் தாய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பாரூலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சுரேந்திர சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications