Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொருளாதாரம் + தொழில் வளர்ச்சிக்கு உதவும் கங்கா எக்ஸ்பிரஸ் சாலை.. அதானி குழுமத்தின் அசத்தலான திட்டம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கங்கை நதியின் பெயரால் உருவாகியுள்ள 'கங்கா விரைவு நெடுஞ்சாலை' இந்தியாவின் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் போக்குவரத்தில் புதிய இணைப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தொழில் வளர்ச்சி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சுற்றுலாவுக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் அதானி குழுமதத்தால் ரூ.36,000 கோடிக்கும் அதிகமான செலவில் 594 கிலோ மீட்டருக்கு கங்கா விரைவு நெடுஞ்சாலை (Ganga Express Way) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கங்கா விரைவு நெடுஞ்சாலை மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை அமைகிறது. இது இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைத்து, 12 மாவட்டங்களில் தொழில், சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இத்திட்டத்தில் சுமார் 80% (464 கி.மீ.) தூரத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் (AEL) துணை நிறுவனமான அதானி சாலைப் போக்குவரத்து லிமிடெட் உருவாக்குகிறது. மீதமுள்ள 130 கிலோமீட்டர் தொலைவை ஐ ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் அமைக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய Greefield மற்றும் Build-Operate-Transfer (BOT) சாலைத் திட்டங்களில் ஒன்றாகும்.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கங்கா விரைவு நெடுஞ்சாலை இந்தியாவின் ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல். அதேபோல் ஏ.இ.எல். தனது போக்குவரத்து பிரிவில் சாலை வர்த்தகத்தை வளர்த்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு நெட்வொர்க்குகளால் நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் ஜி.டி.பி.யில் 14% ஆக உள்ளது. இது அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் 8-9%ஐ விட அதிகம். இந்த செலவுகளைக் குறைக்க, பொருட்கள் மற்றும் மக்களின் விரைவான இயக்கத்திற்கு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களில் அதானி குழுமம் முதலீடு செய்கிறது.

அதானி துறைமுகங்கள் மூலம் இக்குழுமம் தனது திட்டத்தை நிரூபித்துள்ளது. 2007-ல் ஏ.இ.எல்.லிலிருந்து பிரிந்த இவை, தற்போது இந்தியாவின் துறைமுக சரக்குப் போக்குவரத்தில் 27%ஐ கையாள்கிறது. 12 பன்னோக்கு லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், ரயில் இணைப்புடன் ஒரு விரிவான லாஜிஸ்டிக்ஸ் வலையமைப்பை இது கொண்டுள்ளது.

அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையிலும் இக்குழுமம் விரிவடைகிறது. இது இந்தியாவில் எட்டு முக்கிய விமான நிலையங்களை இயக்கி, உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தில் 25%, விமான சரக்குப் போக்குவரத்தில் 31%ஐ கையாள்கிறது. இந்த அமைப்பிற்குள், கங்கா விரைவு நெடுஞ்சாலை தொழில்துறை மையங்கள், லாஜிஸ்டிக்ஸ் மையங்கள், நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய புள்ளியாகும்.

கங்கா விரைவு நெடுஞ்சாலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் விரைவாக பணி நடப்பது தான். வெறும் மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்களில் முடிக்கப்பட்ட இது நவீன இந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் செயல்திறனைக் காட்டுகிறது. எட்டு வழிப்பாதையாக விரிவுபடுத்தக்கூடிய வகையில் ஆறு வழிப்பாதையாக வடிவமைக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை, 3,564 வழி கிலோமீட்டர்களை உள்ளடக்கி உள்ளது.

120 மீட்டர் அகல நெடுஞ்சாலை எதிர்கால விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பிற்கு இடமளிக்கிறது. சுற்றியுள்ள சமூகங்களுக்கு சீரான போக்குவரத்தையும் இணைப்பையும் உறுதிசெய்ய, அதானி கட்டிய பகுதியில் சுமார் 860 மீட்டருக்கு ஒருமுறை வழித்தடக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது விரைவுச் சாலை போக்குவரத்தைப் பாதிக்காமல் இருபுறமும் பயணிக்க அனுமதிக்கிறது. இந்த விரைவு நெடுஞ்சாலை 437 அண்டர்பாஸ், 21 மேம்பாலங்கள், 76 சிறிய பாலங்களை உள்ளடக்கியது. வெள்ளப் பாதுகாப்பிற்காக, சாலை தரையிலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெள்ள மட்டத்தை விட ஒரு மீட்டர் அதிகம்.

நீடித்த நிலைத்தன்மைக்கும், பயண வசதிக்கும் மேம்பட்ட கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாலை ஆயுளை நீட்டித்து, சீரான பயணத்தை உறுதிசெய்ய, பால அடுக்குகளில் பாலிமர் மோடிஃபைட் பிட்டுமென் (PMB) பயன்படுத்தப்படுகிறது.

வேகம், இணைப்புத்திறனுடன், கங்கா விரைவு நெடுஞ்சாலை நவீன உள்கட்டமைப்பு, சாலைப் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் 20 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், உணவு அரண்மனைகள், எரிபொருள் நிலையங்கள், மோட்டல்கள், ஷாப்பிங் பிளாசாக்கள், வாகன சேவை மையங்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன.

லாரி ஓட்டுநர்களுக்காக பிரத்யேக தங்கும் இடங்கள், தாபாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கண்காணிப்பிற்காக 24 மணி நேர சிசிடிவி, அவசரகாலத்திற்கு விபத்து சிகிச்சை மையங்கள் செயல்படும். அதிவேக, பாதுகாப்பான தரவு பரிமாற்றத்திற்கான டார்க் ஃபைபர் கேபிள்கள் நெடுஞ்சாலை முழுவதும் பதிக்கப்பட்டு, எதிர்கால 'ஸ்மார்ட் நெடுஞ்சாலை' தொழில்நுட்பங்களுக்கு உதவும்.

சுற்றுச்சூழல் நடவடிக்கைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதானி மேம்படுத்திய 464 கி.மீ. பகுதியில் ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வனத்துறை கூடுதலாக 4.5 லட்சம் மரங்களைச் சாலை ஓரம் நட்டுள்ளது.

இந்த விரைவு நெடுஞ்சாலை உத்தரப் பிரதேசம் முழுவதும் பயண நேரத்தை வியத்தகு முறையில் குறைக்கும். மீரட் முதல் பிரயாக்ராஜ் வரையிலான 11 மணிநேரப் பயணம், வெறும் ஆறு மணிநேரமாகக் குறைந்து, ஐந்து மணிநேரம் மிச்சமாகும்.

வேகமான பயணத்துடன், சீரான போக்குவரத்து, குறுகிய வழிகளால் சுமார் 30% எரிபொருள் சேமிப்பு கிடைக்கும். இத்திட்டம் தொழில்துறை வளர்ச்சி மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசு, விரைவுச்சாலையுடன் இணைக்கப்பட்ட 12 மாவட்டங்களிலும் 11 புதிய தொழில்துறை வழித்தடங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதில் மீரட், ஹப்பூர், புலந்த்சாகர், அம்ரோஹா, சம்பாள், பதாவுன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் போன்ற மாவட்டங்கள் அடங்கும்.

இந்த வழித்தடங்கள் புதிய உற்பத்தி அலகுகள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்கு வசதிகளை ஈர்த்து, நீண்ட காலத்திற்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

தொழில், லாஜிஸ்டிக்ஸ் தவிர, கங்கா விரைவு நெடுஞ்சாலை வட இந்தியாவின் ஆன்மீக சுற்றுலாவையும் அதிகரிக்கும். கார்முக்தேஷ்வர், கால்கிதாம், பேல்தேவி சண்டிகா சக்தி பீடம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்ட முக்கிய யாத்ரீக இடங்களுக்கான அணுகலை இது மேம்படுத்தும்.

இந்த மத, கலாச்சார தளங்களை திறம்பட இணைப்பதன் மூலம், விரைவு நெடுஞ்சாலை சுற்றுலா, விருந்தோம்பல், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிக்கும்.

மிகப்பெரிய அளவு, நவீன பொறியியல், மூலோபாய இருப்பிடத்துடன், கங்கா விரைவு நெடுஞ்சாலை வட இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பு முதுகெலும்பாக அமைகிறது. மாவட்ட இணைப்பை மேம்படுத்தி, தொழில்துறை வழித்தடங்களை ஆதரித்து, விரைவான லாஜிஸ்டிக்ஸை செயல்படுத்தி, திறன்மிக்க பொருளாதாரத்திற்கு இது வழிவகுக்கிறது.

இந்தியா போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்கிறது. கங்கா விரைவு நெடுஞ்சாலை போன்ற திட்டங்கள், சாலைகள் வெறும் வழித்தடங்கள் அல்லாமல், பிராந்திய வளர்ச்சி, வர்த்தகம், வாய்ப்புகளின் சக்திவாய்ந்த உந்துசக்திகளாக உருவாக முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+