லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தடுப்பூசி போட்டுக்கமாட்டேன்.." மரத்தில் ஏறிய இளைஞர்! "சமத்து.. வாய்யா" சமாதானப்படுத்திய அதிகாரிகள்

By
Google Oneindia Tamil News

லக்னோ: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் மரத்தில் ஏறிய இளைஞரை சமாதானப்படுத்தி தடுப்பூசி செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    தடுப்பூசி போட்டுக்கமாட்டேன்.. மரத்தில் ஏறிய இளைஞர்! சமத்து.. வாய்யா சமாதானப்படுத்திய அதிகாரிகள்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறி இருக்கிறார். அவரை சமாதானம் செய்து தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதேபோல் மற்றொருவர் தடுப்பூசி செலுத்தவந்த அதிகாரியுடன் மல்யுத்தம் செய்திருக்கிறார்.

    தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!

    நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நூறு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்திருக்கிறது இந்தியா. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவைக்க சுகாதாரத்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    உலகம் முழுவதும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமமான விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்படுமானால், பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், மருத்துவமனைகளில் கொத்து கொத்தாக மக்கள் அனுமதிக்கப்படுதல், வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்படுதல் என அனைத்தும் நடப்பாண்டுடன் முடிவுக்கு வந்து விடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

     கட்டாயம் இல்லை

    கட்டாயம் இல்லை

    பெருந்தொற்றை கருத்தில் கொண்டே தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. த‌டுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. எந்த வித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் மத்திய அரசு விதிக்கவில்லை.

     மரத்தில் ஏறிய இளைஞர்

    மரத்தில் ஏறிய இளைஞர்


    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பலில்லா மாவட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதனால்
    மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். அப்படி செல்லும் போது பல நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பலில்லா மாவட்டத்தில் தடுப்பூசிக்கு பயந்த இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறிவிட்டார். கீழே இறங்கச் சொல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனக்கு பயமாக இருக்கிறது, எனக்கு தடுப்பூசி வேண்டாம் என அந்த இளைஞர் மரத்தில் இருந்தே பதில் சொல்கிறார். இந்த பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே சென்றது, ஒருகட்டத்தில் மரத்தில் இருந்த இளைஞர் சமாதானமடைந்து கீழே வந்தார். அவருக்கு அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்கள்.

     மல்யுத்தம் செய்த மீனவர்

    மல்யுத்தம் செய்த மீனவர்

    பலில்லாவில் மற்றொருவர் அதிகாரியிடம் மல்யுத்தம் செய்திருக்கிறார். பலில்லாவில் தடுப்பூசி செலுத்த மீனவர்கள் இருக்கும் பகுதிக்கே சுகாதாரத்துறை சென்றனர். அதிகாரிகள் வருவதைப் பார்த்து பயந்து போன மீனவர் ஒருவர், அங்கிருந்து ஓடிப்போனார். அவரை துரத்தி பிடிக்க முயன்றபோது, அதிகாரியுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார் மீனவர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலே அங்கிருந்து சென்றுவிட்டார்.

     உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம்

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்தில் 24 கோடி தடுப்பூசிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செலுத்தப்பட்டிருக்கின்றன. முதல் தவணை தடுப்பூசி மாநிலத்தில் 95% மக்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 62% மக்களுக்கும் செலுத்தி இருக்கிறது உத்தரப்பிரதேச அரசு.

    English summary
    Uttarpradesh young man climbing a tree to avoid to getting the corona vaccine. Later he came down and getting vaccinated. This youngster video gone fast on the internet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X