17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போதை மருந்து கொடுத்து நாசம் செய்த கொடூரம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் செய்முறைத் தேர்வு எனக் கூறி அழைத்து உணவுப்பொருளில் போதை மருந்து கொடுத்து 17 மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பள்ளி இயக்குனர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இரு தனியார் பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகளை அந்தப் பள்ளியின் இயக்குனர்கள் இரவு நேரத்தில் செய்முறை தேர்வு இருப்பதாக கூறி கடந்த 18ஆம் தேதி பள்ளிக்கு வரவழைத்து உள்ளனர். செய்முறை தேர்வுக்கு ஆசிரியர்கள் யாரும் உடல் செல்லாத நிலையில் அவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை தூக்கி எரிந்த பள்ளி இயக்குனர்கள் வேறு உணவு வரவழைத்து அதில் போதை மருந்தை கலந்து கொடுத்து மாணவிகளை சாப்பிட சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மயக்க நிலையில் இருந்த மாணவிகளை அந்த இயக்குனர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் மாணவிகளின் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதோடு அவர்களின் படிப்பு நாசமாகி விடும் பரீட்சையில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளனர்..

மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்
இதனால் பயந்த அந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து யாரிடமும் கூறவில்லை. ஆனால் மறுநாள் காலை 17 மாணவிகளும் பள்ளிக்குச் செல்லாத நிலையில் அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார்
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு உணவுப் பொருளில் போதை மருந்து கொடுத்து அத்துமீறியது பள்ளிகளின் இயக்குநர்களான யோகேஷ் குமார் மற்றும் அர்ஜுன் சிங் என்பது தெரியவந்தது ஆனாலும் காவல்துறையினர் இரு கொடூரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
இதையடுத்து மாணவிகளும் மாணவிகளின் பெற்றோரும் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி குறித்து பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வாலிடம் கூறியுள்ளனர். இதையடுத்து காவல் நிலையம் சென்ற அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் பள்ளி இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகுதான் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தெரியவந்தது. கொடூர செயலில் ஈடுபட்ட பள்ளி இயக்குனர்களான யோகேஷ் குமார், அர்ஜுன்சிங் ஆகியோர் மீது 17 நாட்களுக்குப் பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முசாஃபர் நகர் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்..

5 விசாரணைக் குழுக்கள்
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரின் தந்தையிடம் இருந்து புகார் பெறப்பட்டுக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்படுவார்கள் என முசாபர்நகர் காவல்துறை அதிகாரி அபிஷேக் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டினார்களா என்பதை அறியவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications