உத்தர பிரதேச தேர்தல்: 7 தொகுதிகளில் கணிசமாக வாக்குகளைப் பிரித்த ஓவைசி கட்சி! சமாஜ்வாதிக்கு ஏமாற்றம்
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்களின் உதவியுடன் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்து இருக்கும் ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச தேர்தலில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் 255 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் அங்கு பாஜக ஆட்சி அமைகிறது.
இந்த தேர்தலில் 111 இடங்களில் வென்று சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்தில் மட்டுமே வென்று மோசமான நிலையில் உள்ளன.
இந்நிலையில் தான் உத்தர பிரதேச தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின், ஏஐஎம்ஐஎம் கட்சி உதவியுடன் பாஜக வேட்பாளர்கள் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

டெபாசிட் இழந்த ஓவைசி கட்சி
உத்தர பிரதேசத்தில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மொத்தம் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 4.51 லட்சம் அதாவது 0.49 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. தேர்தலில் போட்டியிட்ட 95 பேரில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக அசம்கார் மாவட்டம் முபாரக்பூர் தொகுதியை தவிர பிற அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த ஷா ஆலம் என்ற குட்டு ஜமாலி என்பவர் போட்டியிட்டதால் தான் அதிலும் டெபாசிட் கிடைத்தது. இவர் கடந்த நவம்பரில் ஓவைசி கட்சியில் இணைந்த நிலையில் தற்போதைய தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.

7 தொகுதிகளில்...
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை உற்றுக்கவனித்தால் ஒன்று தெளிவாகிறது. அதாவது இவரது கட்சி வேட்பாளர்கள் முஸ்லிம் ஓட்டுக்களை பிரித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி ‛ஆப்பு' அடித்ததும், இதன்மூலம் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு சான்றாக 7 தொகுதிகளை கூறலாம்.

782 ஓட்டு வித்தியாசம்
மெரடாபாத் நகர் தொகுதியில் பாஜகவின் ரிதீஷ் குமார் குப்தா 1 லட்சத்து 48 ஆயிரத்து 384 ஓட்டுக்கள் பெற்றார். இவர் சமாஜ்வாதி கட்சியின் முகமது யூசுப் அன்சாரி என்பவரை 782 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் வாசிக் ரசீத் 2,661 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். இந்த ஓட்டுக்கள் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரின் தோல்வியை நிர்ணயித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸின் ரிஸ்வான் குரேசி 5,351, பகுஜன் சமாஜ் கட்சியினர் இர்சாத் உசேன் 14,013 ஓட்டுக்கள் பெற்றிருந்தனர். மேலும் இந்த தொகுதியில் பாஜகவை எதிர்த்த அனைவரும் முஸ்லிம் வேட்பாளர்கள் ஆவார்கள். இவர்கள் ஓட்டை பிரித்த நிலையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றது தெரியவருகிறது.

217 ஓட்டு வித்தியாசம்
குரேசி சட்டசபை தொகுதியில் பாஜக எம்எல்ஏ சக்கேந்திர பிரதாப் வர்மா வெற்றி பெற்றார். இவர் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ராகேஷ் குமார் வர்மாவை விட 217 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். இங்கு ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் குமைல் அஷ்ரப் கான் 8,451 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். இவர் முஸ்லிம், பாஜகவுக்கு எதிரான ஓட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

3 தொகுதி விபரம்
ஷாரன்பூர் நாகூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் சவுத்ரியிடம் சமாஜ்வாதி கட்சியின் தரம் சிங் 315 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் ரிஸ்வானா3,593 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். ஜான்பூர் ஷாஹன்ஞ் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் சைலேந்திர யாதவ் லலாய் 719 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் நயாப் அகமது கான் 8,128 ஓட்டுக்களும், காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர் 1,529 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர். சுல்தான்பூர் சாதர் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பார் மிர்ஜா அக்ரம் பேக் 5,251 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் 1009 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வினோத் சிங்கிடம், சமாஜ்வாதி கட்சியின் அனூப் சண்டா தோல்வியுற்றார்.

கூட்டணியையும் விடவில்லை
பதோஹி அவ்ராய் தொகுதியில் பாஜகவின் எம்எல்ஏவான தினந்த் பாஸ்கர் 93,691 ஓட்டுக்கள் பெற்று சமாஜ்வாதியின் அஞ்சனி சரோஜை 1,647 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இங்கு ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் டிகைக்கு 2,190 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது. பிஜூனர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் சுசி 1,445 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியில் உள்ள ஆர்எல்டி கட்சி வேட்பாளர் நீரஜ் சவுத்ரியை தோற்கடித்தார். இங்கு ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் முனீர் அகமது 2,290 ஓட்டுக்கள் பெற்றிருந்தார்.

போராடி வெற்றி
இதுதவிர சுல்தான் பூர் இசாலி, ரானிகன்ஞ், ராம்நகர், டோமரியாகன்ஞ் உள்ளிட்ட தொகுதிகளில் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்திலேயே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பாஜகவினரை வீழ்த்தினர். இந்த தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்கள் முஸ்லிம் ஓட்டுக்களை பிரித்தது சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை கேள்விக்குறியாக்க வைத்தது. இருப்பினும் எப்படியோ சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸை விட அதிகம்
உத்தர பிரதேசத்தில் ஓவைசி கட்சி போட்டியிட்ட 95 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 58 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை விட ஓவைசியின் கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளனர். அதாவது இந்த 95 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மொத்தம 3 லட்சத்து 13 ஆயிரத்து 577 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சி 4 லட்சத்து 50 ஆயிரத்து 929 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸை விட 1 லட்சத்து 38 ஆயிரத்து 533 ஓட்டுக்களை ஓவைசியின் கட்சி கூடுதலாக பெற்றுள்ளது.

ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
இந்த தேர்தலில் ஓவைசி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் கூட கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த முறை உத்தர பிரதேசத்தில் 0.24 சதவீத ஓட்டுக்களை பெற்ற அந்த கட்சி தற்போது 0.49 சதவீத ஓட்டுக்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

3வது தோல்வி
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக பிற மாநிலங்களிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். 2019 லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் தொகுதியில் அவரது கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 2020ல் பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் 5 இடங்களில் இந்த கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் மேற்குவங்கம், தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு ஆதரவு கிடைக்காத நிலையில் உத்தர பிரதேசத்திலும் ஓவைசி கட்சியால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications