உலகிலேயே மிக நீளமான கூந்தல்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய சிறுவன்.. வாயை பிளக்க வைத்த நீளம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உலகிலயே மிக நீளமான கூந்தல் உள்ள டீன்ஏஜ் பையன் என்ற சாதனையை படைத்துள்ளார். அவனது கூந்தலின் நீளத்தை கேட்டால் வாயடைத்து போவீர்கள். முழு தகவல்களை இப்போது பார்ப்போம்.
ஒவ்வொருவருக்கு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. உலக சாதனை படைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பலரும் பல்வேறு உலக சாதனைகளை தினமும் படைத்து வருகிறார்கள்.இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சிறுவன் படைத்த உலக சாதனை அனைவராலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்கள் கூந்தலை வளர்க்க ஆசைப்படுவார்கள். பல பெண்கள் கூந்தலின் நீளத்தை பராமரிக்க எத்தனை எண்ணெய், சாம்பு, கண்டிசனர் என எல்லா முயற்சியும் எடுப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பது இல்லை. ஒரு சிலருக்கு தலைமுடி நன்றாக வளரும். நீளமான கூந்தல் உள்ள பெண்களை பார்க்கும் மற்ற பெண்கள், அவர்களை பொறாமையுடன் பார்க்கும் சம்பவங்களும் நடக்கும். நமக்கும் இப்படி கூந்தல் இல்லையே ஏற்று பல பெண்கள் அதனை ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.
இந்நிலையில் உலகிலேயே நீண்ட கூந்தல் உள்ள சிறுவன் என்ற சாதனையை படைத்திருக்கிறான் இந்தியாவைச் சேர்ந்த சிறுவன். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சிதக்தீப் சிங் சாஹல், இளம் பருவத்தினருக்கு மிக நீளமான கூந்தலுக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
சிதக்தீப் சிங் சாஹலின் தலைமுடியின் நீளம் 4 அடி மற்றும் 9.5 அங்குலம் கொண்டதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய கூந்தலா என்று ஆச்சர்யப்படும் அதேநேரம், இதனை பராமரிக்க அந்த சிறுவன் படாதபாடு படுகிறார். தன்னுடைய நீளமான கூந்தலை வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீரில் அலசுகிறார். அதாங்க.. வாரத்திற்கு இரண்டு நாள் கண்டிப்பாக தலைக்கு குளிக்கிறார். விடாமுயற்சியுடன் பராமரிக்கும் சிறுவன், ஒரு முறை குளிக்கும் போது தலையை அலசி உலர வைக்க, குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகுமாம். குறிப்பாக தன்னுடைய அம்மா உதவி இல்லாவிட்டால், ஒரு நாளே ஆகிவிடும் என்கிறார் அந்த சிறுவன்.
கின்னஸ் உலக சாதனை இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, சிறுவன் சாஹல் வழக்கமாக சீக்கியர்களின் வழக்கப்படி, தனது தலைமுடியை தலைப்பாகை கொண்டு மூடுவார். சாஹலின் குடும்பம் மற்றும் அவரது நண்பர்கள் பலர் சீக்கியர்கள், இருந்தாலும் அவர்களில் யாருக்கும் அவரைப் போல நீளமான முடி இல்லை. சிறுவனின் தலை முடி இவ்வளவு நீளமாக வளர்ந்துள்ளது என்பதை பார்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரிய அளவில் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
தன்னுடைய தலைமுடி உலக சாதனை படைத்துள்ளதாக, சிறுவன் சாஹல் தனது உறவினர்களிடம் கூறியபோது, அவர்களில் சிலர், சின்ன பையன் ஏதோ விளையாட்டாக சொல்கிறான் என்று நம்பவே இல்லை. ஆனால் கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பார்த்த பின்னரே அதனை உண்மை என்று நம்பி உள்ளார்கள்.
குழந்தையாக இருந்த போது சாஹலின் தலைமுடியை பார்த்து சக நண்பர்கள் அடிக்கடி கிண்டல் செய்வார்களாம். இது சிறுவனுக்கு அப்போது எல்லாம் பிடிக்காமல் இருந்துள்ளது. கொஞ்சம் வயதான பிறகு துண்டித்துவிடுவேன் என்று பெற்றோர்களிடம் கூறி வந்துள்ளார். ஆனால் தற்போது தலைமுடிதான் தன்னுடைய அடையாளம் என்று பெருமையாக கருதுகிறார் சாஹல்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications