'நுபுர் சர்மாவை கொல்வதுதான் டாஸ்க்'.. உபியில் கைதான பயங்கரவாதி பகீர்.. போலீசார் திடுக்கிடும் தகவல்!
லக்னோ: நுபுர் சர்மா உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ஒருவருக்கு நுபுர் சர்மாவை கொல்வதற்கான டாஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து டிவி விவாத நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தது. உலக அளவிலும் இவரது சர்ச்சை கருத்தானது பரவியது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து
மேலும் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நுபுர் சர்மா இருந்து வந்ததால் அவரது கருத்துக்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியது. நாடு முழுவதும் அவருக்கு எதிராக பலர் போராட்டமும் நடத்தினர். பூதாகரமாக வெடித்த இந்த பிரச்சினையை அடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மாவை நீக்கி அந்த கட்சி நடவடிக்கை எடுத்தது. எனினும் அவரை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன.

அனைத்து வழக்குகளையும்
மேலும் அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் வழக்கு போடப்பட்டது. நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தியும் அவரை தண்டிக்ககோரியும் நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இதற்கிடையே நுபுர் சர்மா என்மீது பல்வேறு இடங்களில் உள்ள கோர்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் என்னால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் செல்ல முடியாது எனவே அனைத்து வழக்குகளையும் ஒரே கோர்ட்டுக்கு அதாவது டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நுபுர் சர்மா உயிருக்கு ஆபத்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நுபுர் சர்மாவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்தது. மேலும் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறாக நுபர் சர்மாவுக்கு எதிராக கருத்து பரவிய நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த டெய்லர் ஒருவரை ராஜஸ்தானில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது.

நுபுர் சர்மாவை கொல்வது தான் டாஸ்க்
இந்த நிலையில், அவரை கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த பயங்கரவாதி ஒருவன் இன்று உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூர் அருகே குண்டகாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் முகம்மது நதீம்(வயது 25) என்பவர் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தாலிபான் அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தெஹ்ரீக் இ தாலிபான் பயங்கரவாதிகள் அமைப்பு
இந்த தகவலின் பேரில் முகம்மது நதீமின் தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றை கண்காணிக்க போலீசார் ஆரம்பித்தனர். இதில், முகம்மது நதீமுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்துடன் தொடர்பு இருந்ததும், நுபுர் சர்மா வை கொல்ல வேண்டும் என்ற டாஸ்க் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ஆயுதப்பயிற்சி எடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல ஆயத்தமாகி இருந்தததாகவும் தெரியவந்து இருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் மற்றும் தெஹ்ரீக் இ தாலிபான் பயங்கரவாதிகளுடன் வாய்ஸ் மெசேஜ் மூலமாக உரையாடியதையும் கண்டறிந்த போலீசார், முகம்மது நதீமின் போனையும் கைப்பற்றியுள்ளனர்.

பயங்கரவாத பயிற்சி
மெய்நிகர் என்று சொல்லப்படும் விர்சுவல் ( virtual) போன் நம்பர்களை உருவாக்குவது எப்படி என்றும் பயங்கரவாதிகளிடம் முகம்மது நதீம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள போலீசார், பாகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா என்ற நபர், அரசு கட்டிடங்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்துவது என்பது குறித்து இவருக்கு பயிற்சி அளித்ததாகவும், சிறப்பு பயிற்சிக்காக பாகிஸ்தான் வர வேண்டும் என்று அங்குள்ள பயங்கரவாத இயக்கங்கள் முகம்மது நதீமுக்கு உத்தரவிட்டதாகவும் போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு
மேலும், இந்தியாவில் தனக்கு உடந்தையாக செயல்பட்ட நபர்கள் பற்றியும் கைதான பயங்கரவாதி தெரிவித்துள்ளதாக கூறியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் , டெலிகிராம், பேஸ்புக் மெசேஞ்சர், கிளப் ஹவுஸ் உள்பட பிற சமூக வலைத்தளங்கள் மூலம் முகம்மது நதீம் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications