லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத் வசிக்கும் மடம் எப்படிப்பட்டது?.. மக்களிடம் கூற தயாரா?.. மாயாவதி சவால்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும்பாலான நேரங்களில் தங்கும் மடம் பெரிய பங்களாவை குறைவானது இல்லை என்பது குறித்து மாநில மக்களுக்கு அவர் கூற வேண்டும் என முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. இதையடுத்து பிப்ரவரி 14, 20, 23, 27, மார்ச் 3, 7 என தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. அது போல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க போராடி வருகின்றன.

சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும்..மார்ச் 10ம் தேதி எப்படி அவமானப்படுவாங்கனு பாருங்க-யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும்..மார்ச் 10ம் தேதி எப்படி அவமானப்படுவாங்கனு பாருங்க-யோகி ஆதித்யநாத்

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

உ.பி. மாநிலத்தில் வேலையின்மை, தலித்துகள் மீதான தாக்குதல், பசு வதை தடை சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை எதிரொலிக்கும் என தெரிகிறது. இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

தங்கள் பிரச்சாரங்களை விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் மீது லக்கிம்கேரியில் கார் ஏற்றிய விவகாரம், உன்னவ் பலாத்கார வழக்கு, ஹத்ராஸ் பலாத்கார வழக்கு உள்ளிட்டவை எதிரொலிக்கும் என தெரிகிறது. மேலும் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. ஆன்லைன் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மாயாவதி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், யோகி ஆதித்யநாத் அவர் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் ஒரு பெரிய மடம் உள்ளது. இங்குதான் பெரும்பாலான நேரங்களில் தங்குவார். மடம் என்றால் சாதாரணமாக இருக்காது. அதே நேரம் பெரிய பங்களாவுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.

யோகியின் மடாலயம்

யோகியின் மடாலயம்

இது குறித்து உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மக்களுக்கு தெரியாது. இதை யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு சொன்னால் சிறப்பாக இருக்கும். ஒரு முதல்வர் தனது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து கூற வேண்டும். ஸ்ரீ கன்ஷிராம் ஜி சஹாரி கரீப் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்த போது நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளது. இரு கட்டங்களாக ஒன்றரை லட்ச வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நிலமில்லாத லட்சக்கணக்கானவர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன என்றார் மாயாவதி.

English summary
BSP Supremo Mayawati took a jibe on CM Yogi Adityanath's monastery which is not less than a big bungalow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X