வினையான திருடன்-போலீஸ் விளையாட்டு.. துப்பாக்கியால் சுட்ட பாஜக பிரமுகரின் மகன்.. 11 வயது சிறுவன் பலி
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் திருடன் போலீஸ் விளையாட்டின்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளரின் மகன் பொம்மை துப்பாக்கி என நினைத்து உண்மையான கைத்துப்பாக்கியால் சுட்டதில் 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் இருக்கும்போது அவர்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மட்டுமின்றி லைசென்ஸ் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது. இருப்பினும் சில வீடுகளில் பெற்றோர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இதனால் தங்களின் குழந்தைகள் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் லைசென்ஸ் கைத்துப்பாக்கியை சிறுவனின் கைக்கு கிடைக்கும்படி பாஜக தலைவர் வைத்த நிலையில் அது ஒரு சிறுவனின் உயிரை பறித்துள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

பாஜக பொதுச்செயலாளரின் மகன்
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி அருகே கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் பாஜக மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் அவரது மகன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.

திருடன் போலீஸ் விளையாட்டு
சிறுவர்கள் அனைவரும் இணைந்து 'திருடன் போலீஸ்' விளையாட்டு விளையாடினர். இந்த வேளையில் வீட்டுக்கு சென்ற சஞ்சயின் மகன் வீட்டுக்கு சென்று தந்தையின் பாதுகாப்புக்காக வாங்கி வைத்திருந்த லைசென்ஸ் கைத்துப்பாக்கியை எடுத்துள்ளார். இதனை வீட்டில் இருந்தவர்கள், விளையாடிய சிறுவர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இந்த வேளையில் திருடன் போலீஸ் விளையாட்டின்போது அந்த துப்பாக்கியை வைத்து சுடுவது போல் சஞ்சயின் மகன் ஆக் ஷன் செய்தான்.

குண்டு பாய்ந்து இறந்த சிறுவன்
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி திடீரென்று சுட்டது. இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேதாந்தா (11) என்ற சிறுவன் மீது பாய்ந்தது. இதில் குண்டு பாய்ந்த சிறுவன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். வேதாந்தாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார்.

பொம்மை துப்பாக்கி என நினைத்து..
இதுபற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பொம்மை துப்பாக்கி என நினைத்து தான் சஞ்சயின் மகன் அதனை எடுத்து சுட்டதும், தோட்டா லோட் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications