லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி இஸ்லாமிய போராட்டம்.. முக்கிய புள்ளியின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு.. கடுமை காட்டும் யோகி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வன்முறையாளர்களின் வீடுகள் தொடர்ந்து புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் ஒருவரின் வீடு இடிக்கப்பட்டது. வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் சட்டம் மற்றும் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Recommended Video

    Uttar Pradesh போராட்டம் எதிரொலி.. மீண்டும் புல்டோசரால் இடிக்கப்படும் வீடுகள் *India

    இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு கிளம்பின.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்! கர்ப்பகிரஹ பணியை துவக்கி யோகி ஆதித்யநாத் பெருமை இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்! கர்ப்பகிரஹ பணியை துவக்கி யோகி ஆதித்யநாத் பெருமை

    உத்தர பிரதேசத்தில் வன்முறை

    உத்தர பிரதேசத்தில் வன்முறை

    உத்தர பிரதேச மாநிலத்தில் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் பேராட்டம் நடந்தது. இதில் கல்வீசப்பட்டதால் வன்முறையானது. பிரக்யாராஜில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    304 பேர் கைது

    304 பேர் கைது

    வன்முறை தொடர்பாக மொத்தம் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரக்யாராஜில் 91 பேர், சாரன்பூரில் 71 பேர், ஹத்ராஸில் 51 பேர், மொரடாபாத்தில் 3 பேர், பெரோசாபாத்தில் 15 பேர் அம்பேத்கார் நகரில் 34 பேர் என மொத்தம் 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக மேலும் ஏராளமானவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    யோகி ஆதித்யநாத் உத்தரவு

    யோகி ஆதித்யநாத் உத்தரவு

    இதற்கிடையே வன்முறையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும். மேலும் புல்டோசர் நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்திலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புல்டோசர் நடவடிக்கை

    புல்டோசர் நடவடிக்கை

    இதன் ஒருபகுதியாக இன்று மதியம் பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை திரட்டியதாக போலீசார் குற்றம்சாட்டி கைது செய்துள்ள நிலையில் புல்டோசர் மூலம் வீடு இடிக்கப்பட்டுள்ளது.

    நோட்டீஸ் வழங்கல்

    நோட்டீஸ் வழங்கல்

    முன்னதாக வீடு இடிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பு சார்பில் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரை வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஜாவித் முகமதுவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தபோதே வீட்டின் ஒருபகுதி இடிக்கப்பட்டது.

     2 நாளில் 4 வீடுகள் இடிப்பு

    2 நாளில் 4 வீடுகள் இடிப்பு

    முன்னதாக நேற்று சாரன்பூர் வன்முறை தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோர் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. இதேபோல் ஜூன் 3ல் கான்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பா முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் ஹயத்தின் நெருங்கிய உறவினராக கருதப்படும் முகமது இஷ்தியாக்கின் ஸ்வரூப் நகரில் உள்ள கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூன் 3 முதல் உத்தர பிரதேசத்தில் மொத்தம் 7 இடங்களில் வன்முறை நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In Uttar Pradesh, houses of violaters are being bulldozed. In this regard one house was demolished today. No one should engage in violence. Chief Minister Yogi Adityanath has strongly warned that legal and bulldozer action will be taken if involved.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X