சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்.. என்ன செய்யப்போகிறார் அகிலேஷ் யாதவ்? அடுத்தடுத்த திருப்பங்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், சமாஜ்வாதி கூட்டணியில் இருக்கும் அப்னா தளத்துக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

சமாஜ்வாதி கட்சி
ஆனால் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர் போட்டியைக் கொடுத்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலில் பாஜக-விடம் தோல்வியைத் தழுவியது. அதற்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குடும்ப கட்சி, ஜாதி அரசியல் உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த தேர்தலில் சமாஜ்வாதி தோற்றது.

அகிலேஷ் யாதவ்
கடந்த தேர்தலில் செய்த தவறுகளை மாற்றிக்கொண்டு, இந்த தேர்தலில் குடும்பத்தினருக்கு அதிக இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார் அகிலேஷ் யாதவ். அதே சமயம் பாஜக-வில் இருந்த பல ஒபிசி தலைவர்களை சமாஜ்வாதிக்கு அழைத்து வந்தார் அகிலேஷ் யாதவ். இது பாஜகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது.

கூட்டணி
பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாக அனுப்பிரியா படேலின் அப்னா தளம் விளங்குகிறது. இதிலிருந்து பிரிந்துவந்த அனுப்பிரியாவின் தாயார் கிருஷ்ணா படேல் அப்னா தளம் (கமரவாடி) என்ற கட்சியை நடத்திவருகிறார். உத்தரப்பிரதேச தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியாக கருதப்படும் அப்னா தளத்தால்(கமராவடி) சிக்கல் நிலவி வருகிறது. கூட்டணியில் தொடருமா அல்லது வெளியேறுமா என்பது இன்று அகிலேஷ் யாதவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் தெரியவரும்.

போட்டி
உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா போட்டியிடும் சிரத்து தொகுதியில், சமாஜ்வாதி சார்பாக பல்லவி படேல் களமிறங்கியுள்ளார். இந்த அறிவிப்பு அந்தத் தொகுதியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. அவர் எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவார் என்று இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பல்லவி படேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஜகவின் துணை முதல்வருக்கு எதிராக போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications