Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரின் 5ஆம் திருமணம்! 7 குழந்தைகளுடன் மண்டபத்திற்குள் நுழைந்த மனைவி.. அடுத்து நடந்த சம்பவம் இருக்கே

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடக்க இருந்த திருமணத்தில் கடைசி நேரத்தில் நடந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் திருமணங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு திருமணத்தையும் நடத்தி முடிப்பது பெரும்பாடு தான்.

இப்படிப் பல நூறு பிரச்சினைகளைத் தாண்டி நடக்கும் திருமணத்தில் கடைசி நேரத்தில் பெரிய பிரச்சினை வந்தால் எப்படி இருக்கும். அதுவும் மணமகனின் தவறால் வந்தால் எப்படி இருக்கும்.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

அப்படியொரு சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு 55 வயதான ஷாபி அகமது என்பவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தான் கடைசி நிமிடத்தில் அங்கு யாருமே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. இதனால் திருமணம் நின்றது மட்டுமின்றி, அங்குப் பெரிய அடிதடி சம்பவமே அரங்கேறி உள்ளது.

திருமணம்

திருமணம்

உத்தரப் பிரதேசத்தில் 55 வயதான ஷாபி அகமது என்பவருக்குத் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இது அவருக்கு நடக்க இருந்த 5ஆவது திருமணம் ஆகும். இருப்பினும், அதற்கு நேற்று அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நிலையில், மண்டபத்தில் மடமடவென 7 குழந்தைகள் நுழைந்துள்ளனர். மேலும், அவரது தாயும் உள்ளே வந்துள்ளார்.

குழந்தைகள்

குழந்தைகள்

இதில் விஷயம் என்னவென்றால் இந்த ஐந்து குழந்தைகளும் மணமகனுக்குப் பிறந்தவர்கள் தான். மண்டபத்தின் உள்ளே புகுந்த அவர்கள் மணமகளின் குடும்பத்தினரிடம் இது தொடர்பாகத் தெரிவித்து உள்ளனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென அடிதடியாகவும் மாறியது. அங்கு இருந்தவர்கள் மாப்பிள்ளையைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

போலீசார்

போலீசார்

இது குறித்து கோட்வாலி போலீஸ் ஆய்வாளர் தேஜ் பிரகாஷ் சிங் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் தான் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குற்றவாளியைக் கைது செய்தோம்" என்றார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஷாபி அகமது தனது மனைவியிடம் இருந்து சில காலம் விலகியே இருந்துள்ளார். இருப்பினும், மாதம் மாதம் செலவுக்குப் பணம் கொடுத்துள்ளார். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே அவர் பணம் கொடுப்பதை நிறுத்துவிட்டார். அப்போது தான் அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அவர்களுக்குத் தெரிய வந்தது. இதன் காரணமாகவே அவர்கள் திருமணத்தை நிறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+