உ.பியில் சொல்லி அடித்த பாஜக.. நேராக மோடியை சந்திக்கும் யோகி.. இன்று முக்கிய மீட்டிங்! என்ன காரணம்?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது முதல்வராக பதவியேற்பது, புதிதாக அமைச்சரவையை அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு மார்ச் 7 ல் முடிவடைந்தது. இதையடுத்து மார்ச் 10ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. முதன் முதலாக சட்டசபை தேர்தலில் களமிறங்கிய யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர் தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 390 ஓட்டுகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சுபவாதி உபேந்திரா தத்சுக்லாவை வீழ்த்தினார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்கிறார்.

பாஜக வெற்றி
இந்த தேர்தலில் பாஜக 255, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 111, ஏடிஏஎல் 12, ஆர்எல்டி 8, நிசாத், எஸ்பிஎஸ்பி தலா 6, காங்கிரஸ் 2,மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. இங்கு ஆட்சி அமைக்க 202 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மோடியை சந்திக்கும் யோகி
இந்நிலையில் இன்று யோகி ஆதித்யநாத் டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். முதல்வராக பொறுப்பேற்கும் தேதி, அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்எல்ஏக்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.

கட்சி மேலிடம் முடிவு
யோகி ஆதித்யநாத்துடன் உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் ரத்தன் தேவ் சிங், அமைச்சர் சுனில் பன்சால், மாநில பொறுப்பாளர் ராதா மோகன் சிங் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர். இதுபற்றி பாஜகவினர் கூறும்போது, யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரைவில் துணை முதல்வர், அமைச்சர்களாக புதுமுகங்கள் இடம்பெறலாம் என்றனர். மேலும் அமைச்சரவையில் ஜாதி, பிராந்தியங்கள் அடிப்படையில் எம்எல்ஏக்கள் நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் இருந்தாலும் இறுதி முடிவை கட்சி மேலிடம் தான் எடுக்கும் என்றனர்.

பதவியேற்பு எப்போதும்
இந்த சந்திப்பின்போது முதல்வர் பதவியேற்பு விழா மார்ச் 15 அல்லது மார்ச் 21ல் நடத்த முடிவு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் துணை முதல்வர் பதவிக்கு சுவாந்தர தேவ் சிங், பேபி ராணி மவுரியா, பிரிஜேஷ் பட்நாயக், கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் சுவாந்தர தேவ் சிங் போக்குவரத்து துறை அமைச்சராககவும், மாநில கட்சி தலைவராகவும் இருந்தவர் ஆவார். கேசவ் பிரசாத் மவுரியா, சிராது தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் அவர் ஓபிசி பிரிவில் செல்வாக்கான தலைவர். இதனால் அவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்கலாம். பேபி ராணி மவுரியா உத்தரகாண்ட் கவர்னராக இருந்ததோடு, பிராமின் வகுப்பை சேர்ந்தவர் என்பதோடு, ஜாதவ் சமூகத்தில் புகழ் பெற்றவர். பிரிஜேஷ் பதாக், பிராமின் என்பதோடு, சட்டத்துறை அமைச்சராக இருந்தார். மாநில தலைவர் சுவாந்தர தேவ் சிங் குர்மி தலைவராகவும், பாஜக வெற்றிக்கு பெரிதும் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
மேலும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளான ராஜேஷ்வர் சிங், அசீம் அருண் ஆகியோருக்கு அமைச்சர் பதவிக்கான அதிர்ஷ்டம் கிடைக்கலாம். ராஜேஷ்வர் சிங் லக்னோ சரோஜினி நகர் எம்எல்ஏவாக உள்ளார். அசீம் அருண், கானாஜ்(சாதர்) தொகுதி எம்எல்ஏவாக உள்ளதோடு, ஏடிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி இருந்தார். இவரது தந்தை ராம் அரண் உத்தர பிரதேச டிஜிபியாக இருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

ராஜ்நாத் சிங் மகன்
மேலும் நொய்டா சட்டசபை தொகுதியில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் வெற்றி பெற்றுள்ளார். இவர் வரலாற்று சிறப்பாக 1 லட்சத்து 81 ஆயிரத்து 513 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியுள்ளார். இதனால் அவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம். இவர் 2017 முதல் 2022 காலக்கட்டத்தில் நன்றாக செயல்பட்டார். இது அவருக்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகையாளர்
மேலும் பத்திரிகையாளராக இருந்து வெற்றி பெற்றுள்ள சலாப் மணி திரிபாதி, பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். இவர் யோகி ஆதித்யநாத்துக்கு மிகவும் நெருக்கமானாவர். இவர் இதற்கு முன்பு ஏபிவிபி அமைப்பிலும் செயல்பட்டுள்ளார். இவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். அத்துடன் கூட்டணி கட்சியான அப்னா தளம், நிசாத் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காலம். எம்எல்சியான ஆசிஷ் பட்டீல், சஞ்சய் நிசாத் ஆகியோருக்கு பதவி வழங்கப்படலாம்.

மூத்த தலைவர்
இதுதவிர மூத்த தலைவரும் சாஜான்பூர் தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாகியுள்ள சுரேஷ் கானாவுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம்.உத்தர பிரதேசத்தில் மீண்டும் புதிய ஆட்சி அமைவதையொட்டி நேற்று முன்தினம் யோகி ஆதித்யநாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னர் ஆனந்தி பென் படேலிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications