உ.பி அலகாபாத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை.. ஆதித்யநாத் அதிரடி.. என்ன காரணம்?

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமண நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அலகாபாத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை... என்ன காரணம் தெரியுமா ?

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமண நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே நிறைய வித்தியாசமான சட்டங்களை கொண்டு வருகிறார். ஒரு பக்கம் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் என்கவுண்டர் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இன்னொரு பக்கம் நகரங்களின் பெயர்களை ஆதித்யநாத் தொடர்ந்து மாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்புதான் அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றினார். இந்த நிலையில் தற்போது அங்கு திருமணம் செய்ய தடை விதித்துள்ளார்.

    மூன்று மாதம்

    மூன்று மாதம்

    அவரின் உத்தரவின் படி ஜனவரி 1ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரை திருமணம் நிகழ்ச்சிகள் அங்கு நடக்க கூடாது. இதற்காக மண்டபங்கள் ஒதுக்க கூடாது. அதேபோல் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடக்க கூடாது. வீட்டில் வேண்டுமானால் திருமணம் நடத்தலாம்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா நடக்கிறது. இதற்கு நாடு முழுவதிலும் இந்து சாமியார்களும், குருக்களும், அகோரிகளும் வருவது வழக்கம். இதில் 2 லட்சம் பேர் வரை சாமியார்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விழா பாதிக்க கூடாது என்று திருமணத்தை தடை செய்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    ஏற்கனவே திருமணம் செய்ய திட்டமிட்டவர்களும் அதை தள்ளி வைக்க வேண்டும். அதையும் மீறி திருமணம் நடத்தினால், அந்த மண்டபங்கள் சீல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு முன் கும்பமேளா சமயத்தில் திருமணம் செய்ய மூன்று நாட்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    இது அப்பகுதி மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் இதனால் தங்கள் திருமணத்தை தள்ளிவைக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+