உ.பி.யில் இப்போதே சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்.. சமாஜ்வாடி- பா.ஜ.க மோதல்.. கடும் வார்த்தை போர்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தாலிபான்கள் போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இங்கு மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. கொரோனாவை சரியாக கையாளாத முறை காரணமாக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நின்றனர்.

 யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

அவரை அடுத்த முதல்வர் வேட்பாளாராக அறிவிக்க என்று டெல்லி பா.ஜ.க தலைமையிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் உடனடியாக டெல்லி சென்ற யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்து கூறினார். மேலும், அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதையும் பதிவு செய்து விட்டார்.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் இப்போது இருந்தே இதற்கான பணிகளை தொடங்கி விட்டது. சமாஜ்வாடி கட்சி அடிக்கடி ஆளும் பா.ஜ.க.வை விளாசி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகியவை குறித்து மக்களிடம் எடுத்துரைத்தது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள்

இந்துக்களுக்கு எதிரானவர்கள்

சம்பல் மாவட்டத்தில் ரூ.5 275 கோடி மதிப்பிலான 62 திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர் கூறியதாவது:- சம்பல் மாவட்டத்திற்கு ஒரு வரலாற்று கடந்த காலம் உள்ளது, ஆனால் சம்பாலில் தலிபான்களுக்கு ஆதரவளிக்கும் மக்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. சமாஜ்வாதி கட்சியினர் பெண்கள், தலித் மக்கள், மற்றும் பின்தங்கியவர்கள், இந்துக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக உள்ளனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

தாலிபான்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் சில சமாஜ்வாடி தலைவர்கள் வெட்கமின்றி அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய எதிர்ப்புப் படைகளுக்கு(தாலிபான்கள்) அடைக்கலம் கொடுக்க தயங்காத சிலர் இருக்கிறார்கள். மோடிஜியின் ஆசி இருக்கும் வரை இந்தியாவை யாராலும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

பசுக்கள் பாதுகாப்பாக இல்லை

பசுக்கள் பாதுகாப்பாக இல்லை

உத்தர பிரதேசசத்தில் 2017-ம் ஆண்டுக்கு முன்பு பசுக்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால் நாங்கள் இறைச்சிக் கூடங்களை மூடினோம்.பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை, கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தினோம். இதன்மூலம் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸின் வர்த்தகம் முடிவுக்கு வந்தது. அவர்கள் ஆட்சி காலத்தில் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை, ஏனெனில் குண்டர்கள் தங்கள் கவுரத்துடன் விளையாட முடியும்.

கலவரம் இல்லை

கலவரம் இல்லை

ஆனால் யாராவது இன்று நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியத்துடன் விளையாடினால் அவர்கள் ரியோதனன் மற்றும் துஷாஷனின் விதியத்தான் சந்திக்க நேரிடும். உ.பி.யில் கலவரம் நடப்பதாக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். உ.பி.யில் எந்த கலவரமும் இல்லை; மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+