15 பேர் படிக்காதவங்க.. 100 பேர் பட்டதாரிங்க.. உபி., வேட்பாளர்களின் சுவாரஸ்ய அப்டேட்ஸ்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தலில் 58 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள், 100 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

வேட்புமனு
உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல், வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பற்றிய ஒரு பார்வையை அவர்களது வேட்புமனுக்களுடன் இணைந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வழங்கி உள்ளது.

வேட்பாளர்கள்
அதில், ''உத்தரபிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் போட்டியிடுகிற 615 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆராயப்பட்டன. 214 பேர் தங்கள் வயது 25 முதல் 40 வரையில் எனவும், 328 பேர் 41 முதல் 60 வயது வரையில் எனவும் தெரிவித்துள்ளனர். 73 பேர் தங்கள் வயது 61 முதல் 80 வரையில் என கூறி உள்ளனர். இவர்களில் 15 வேட்பாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், அதாவது படிக்காதவர்கள். 38 வேட்பாளர்கள் எழுத்தறிவு உள்ளவர்கள். 10 பேர் ஐந்தாம் வகுப்பு தேறியவர்கள், 62 பேர் எட்டாம் வகுப்பு தேறியவர்கள். 65 பேர் பத்தாம் வகுப்பு தேறியவர்கள். 102 பேர் பிளஸ்-2 பாஸ் செய்தவர்கள் ஆவார்கள்.

பட்டதாரிகள்
போட்டியிடும் வேட்ப்பாளர்களில் பட்டதாரிகள் 100 பேர், 78 பேர் தொழில்கல்வி படித்தவர்கள், 108 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், 18 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 7 பேர் டிப்ளமோ படித்தவர்கள், 12 பேர் தங்கள் கல்வித்தகவல்களை வழங்கவில்லை. 239 வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தெரிவித்திருக்கிறார்கள். 304 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றவர்கள் என பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்'' என்று தெரியவந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications