உ.பி. தேர்தல்.. இந்த ஒரு எக்ஸிட் போல்தான் ரிசல்ட்டை துல்லியமாக கணித்துள்ளது.. நீங்களே பாருங்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. தேர்தல் முடிவுகளுடன், மேட்ரிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு ஒத்துப்போகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் என ஐந்து மாநிலத்துக்கும் தேர்தல் நடந்து, நேற்று அதன் முடிவுகள் வெளியாகின.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும், மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முன்பே பல கருத்துக்கணிப்புகள் வெளியானது. ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 283 இடத்தையும், சமாஜ்வாதி 62 இடத்தையும் பெறும் என கணித்திருந்தது. ஏபிபி சி -வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 263 இடத்தையும், சமாஜ்வாதி 113 இடத்தையும் பெறும் என கணித்திருந்தது. ஜீ டிவி நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 255 இடத்தையும், சமாஜ்வாதி 199 இடத்தையும் பெறும் என கணித்திருந்தது.

எக்ஸிட் போல்
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 7வது கட்ட தேர்தல் முடிவடைந்ததும், உத்தரப்பிரதேச தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில், நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 218, சமாஜ்வாதி 153 இடங்கள் பெறும் என கணிக்கப்பட்டது. டைம்ஸ் நவ் பாஜக 225, சமாஜ்வாதி 151 எனவும், ஜீ நியூஸ் 235, சமாஜ்வாதி 147 என்றும், ஏபிபி கருத்துக்கணிப்பில் பாஜக 236, சமாஜ்வாதி 140 என்றும் கணித்தது.

கருத்துக்கணிப்பு
இந்தியா டுடேவில் பாஜக 307, சமாஜ்வாதி 86 இடமும் பெறும் என கணித்தது. ரிபப்ளிக் டிவி பாஜக 240, சமாஜ்வாதி 140 எனவும் கூறியது. சாணக்யா டுடே பாஜக 294, சமாஜ்வாதி 105, ஜான்கி பாத் பாஜக 241, சமாஜ்வாதி 150 என்று கருத்து கணிப்பு வெளியிட்டது. மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 269, சமாஜ்வாதி 126 என்றது, இடிஜி ரிசர்ச் பாஜக 237, சமாஜ்வாதி 157 என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது.

தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக 273 இடத்திலும், சமாஜ்வாதி கட்சி 125 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகளுடன் ஒத்துவருகிறது. மேட்ரிஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 269, சமாஜ்வாதி 126 இடங்களைப் பெறும் என கூறியது. ஆனால் அனைத்து கருத்துகணிப்புகளும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றது, அதே போல் பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications