"மோடியின் பொருளாதார கொள்கையால் நஷ்டம்" என கூறி, பேஸ்புக் லைவில் மனைவியுடன் விஷம் குடித்த ஷூ வியாபாரி
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கையால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய ஷூ வியாபாரி மனைவியுடன் பேஸ்புக் லைவில் விஷம் குடித்தார். இதில் மனைவி இறந்த நிலையில் வியாபாரிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் நகரை சேர்நதவர் ராஜீவ் தோமர் (வயது 40). மனைவி பூனம் (38). இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜீவ் தோமர் ஷூ கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

பேஸ்புக் லைவ்
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ பதிவிட்டார். அதில், ‛‛எனக்கு பேசுவதற்கு சுதந்திரம் இருக்கும் என நினைக்கிறேன். நான் இறந்தால்... இதை பார்ப்பவர்கள் அதிகமாக பகிருங்கள். நான் இந்திய நாட்டுக்கு எதிரானவன் அல்ல. நாட்டுக்கு உண்மையாக இருப்பவன்.

வியாபாரிகள் அவஸ்தை
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்று கூற விரும்புகிறேன். சிறு வியாபாரிகள், விவசாயிகளின் நலனை காக்கும் நபராக நீங்கள் இல்லை. உங்கள் கொள்கையை மாற்றி கொள்ளுங்கள்'' என கூறினார்.

விஷம் குடித்ததில் மனைவி பலி
பின்னர் அவர் மனைவி பூனத்துடன் விஷம் குடித்தார். இதை பேஸ்புக் லைவில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பூனம் இறந்தார். ராஜீவ் தோமருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா வருத்தம்
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவலை தெரிவித்தார். அவர் கூறுகையில், ‛‛உத்தர பிரதேசத்தில் சிறுவியபாரிகள் தொழிலதிபர்கள் மனஉளைச்சலில் இருப்பதை பார்க்க முடியுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு ஆகியவை அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டது'' என வருந்தினார்.












Click it and Unblock the Notifications