Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவிற்கு வரும் தேர்தல் திருவிழா.. உத்தர பிரதேசத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நாளை 54 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்த தேர்தல் முக்கியமானதாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பாஜக, அப்னா தளம்(சோனிலால்), நிசாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ்கட்சி அப்னா தளம் (கே), ஓம்பிரகாஷ் ராஜ்பாரின் சுகேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் தனித்து களம் காண்கிறது.

நாளை கடைசிகட்ட தேர்தல்

நாளை கடைசிகட்ட தேர்தல்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 என மொத்தம் ஆறு கட்ட ஓட்டுப்பதிவுகள் மூலம் 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. 7 ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதன்படி அசம்கார், மாவ், ஜான்பூர், காசிப்பூர், சந்தாலி, வாரணாசி, பதோகி, மிர்சாபூர், சோன்பத்ரா ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிடர்களுக்கு 11, பழங்குடியினருக்கு 2 தொகுதிகள் என மொத்தம் 13 தொகுதிகள் தனி தொகுதிகளாகும். மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.06 கோடி பேர் ஓட்டளிக்க தயாராக உள்ளனர்.

வேட்பாளர்கள் விபரம்

வேட்பாளர்கள் விபரம்

இதில் பாஜக சார்பில் 48 வேட்பாளர்கள், அப்னாதளம்(எஸ்), நிசாத் கட்சி சார்பில் தலா 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சமாஜ்வாடி கூட்டணியை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி சார்பில் 45 வேட்பாளர்களும், எஸ்பிஎஸ்பி கட்சி சார்பில் 7 வேட்பாளர்களும், அப்னாதளம் (கே) சார்பில் 2 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேச அமைச்சர்களான நீல்காந்த் திவாரி, அனில் ராஜ்பார், ரவீந்திர ஜெய்ஸ்வா், கிரிஷ் யாதவ், ராம சங்கர் சிங் பட்டேல், ஆகியோரும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சமாஜ்வாடி கட்சியில் இணைந்த தாரா சிங் சவுகானும் களத்தில் உள்ளனர். மேலும் ஷாகூராபாத் தொகுதியில் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம்பிரகாஷ் ஆகியோர் கவனிக்க கூடியவராக உள்ளார்.

மோடி, அகிலேசுக்கு முக்கியம்

மோடி, அகிலேசுக்கு முக்கியம்

இதில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்ற அசம்கார் பாராளுமன்ற தொகுதிகளும் வருகின்றன. இதனால் இந்த கடைசிகட்ட தேர்தல் இருவருக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வாரணாசியில் பாாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு பிரசாரம் செய்ய வைத்தார். இவர் தவிர காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் சார்பில் மாயாவதி ஆகியோரும் வாரணாசியில் தீவிர பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

2017 எப்படி

2017 எப்படி

2017 ல் நடந்த சட்டசபை தேர்தலில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு அப்போது நிலவிய மோடி அலையே காரணமாகும். மேலும் இது அண்டை மாவட்டங்களிலும் எதிரொலித்தது. ஒருகாலத்தில் இந்த மாவட்டங்கள் இந்த மாவட்டங்கள் சமாஜ்வாடியின் கோட்டையாக இருந்தன. தற்போது பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த 54 சட்டசபை தொகுதிகளுக்கு 2017ல் நடந்த தேர்தலில் பாஜக 29 இடங்களிலும், அப்னா தளம் 4, எஸ்பிஎஸ்பி 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும், சமாஜ்வாடி 11 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

முடிந்தது தேர்தல்

முடிந்தது தேர்தல்

உத்தர பிரதேசத்தில் நாளை இறுதிக்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் முழுமையாக தேர்தல் முடிய உள்ளது. இங்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் உத்தர பிரதேசம் கைக்கொடுக்கும். ஏனென்றால் இங்கு தான் 78 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தற்போது தேர்தல் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது.

ரிசல்ட் எப்போது

ரிசல்ட் எப்போது

இதில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் மார்ச் 10ல் எண்ணப்பட்டு அன்றே ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தான் பிற மாநிலங்களான பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மணிப்பூர் சட்டசபை தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+