லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரன்னிங்கில் வந்த விளையாட்டு அமைச்சர்.. மிரண்டு போன அதிகாரிகள்! உபி-இல் அரங்கேறிய கடைசி நேர காமெடி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேச விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி செய்துள்ள சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்.10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களில் 4இல் பாஜக தான் தற்போது ஆட்சியில் உள்ளது

எனவே, மீண்டும் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதற்குத் தேவையான பணிகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது.

Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

குறிப்பாக, நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் முக்கிய குறியாக உள்ளது. கடந்த 2017 மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக மொத்தம் 312 இடங்களில் வென்றிருந்தது. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பலரும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

விளையாட்டுத் துறை அமைச்சர்

விளையாட்டுத் துறை அமைச்சர்

இதற்கிடையே அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி ரன்னிங்கில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி இந்த முறை ஃபெஃப்னா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஃபெஃப்னா தொகுதிக்கு 5ஆம் கட்ட வாக்குப்பதிவு, அதாவது பிப். 27ஆம் தேதி தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் போட்டியிடப் பிப்ரவரி 11 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.

நல்ல நாள்

நல்ல நாள்

இருப்பினும், நேற்று வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று கருதி உபேந்திர திவாரி வேட்பு மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டார். இதற்காக அவரது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். செல்லும் வழியில் தாமதம் ஏற்பட்டதால், அவர் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த போதிலும், எப்படியாவது நல்ல நாளை மிஸ் செய்யக் கூடாது என்று கருதிய உபேந்திர திவாரி ரன்னிங்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ரன்னிங்கில் வந்த அமைச்சர்

ரன்னிங்கில் வந்த அமைச்சர்

இதற்காக காவி தலைப்பாகை அணிந்தபடியே மாலையுடன் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரன்னிங்கில் வந்தார். இந்த விளையாட்டுத் துறை அமைச்சர் வந்த வேகத்திற்கு அவரது பாதுகாவலர்களாலேயே ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பாருங்கள். இப்படிக் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ரன்னிங்கில் வந்த அமைச்சர், ஒரு வழியாக நினைத்தபடி வெள்ளிக்கிழமையே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்.

டிரெண்டிங்

வேட்புமனு தாக்கல் செய்யத் தலைப்பாகை மற்றும் மாலையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரன்னிங்கில் வரும் அமைச்சர் உபேந்திர திவாரியின் இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் சாமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
UP sports minister Running late to meet the day's deadline of filing nomination papers for Uttar Pradesh assembly elections: Uttar Pradesh Sports Minister Upendra Tiwari sprints to Ballia collectorate to file his nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X