கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் லஞ்சம்.. தப்பு பண்ணிட்டீங்க.. டிஎஸ்பிக்கே ஷாக் தந்த யோகி.. ஆக்சன்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றிய காவல்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் கையும் களவுமாக மாட்டியுள்ள நிலையில் அவரை சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது அம்மாநில காவல்துறை வட்டாரங்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்கார புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதாக டிஎஸ்பி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றிருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை
வித்யா கிஷோர் ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூரில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவருக்கு புகார் ஒன்று வந்திருக்கிறது. அதாவது, மருத்துவமனையின் மேனேஜர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் என இருவர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் இது தொடர்பாக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் இளம்பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார். புகார் குறித்து ஓரிரு நாட்கள் கழித்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை முறையாக நடைபெறவில்லை.

குற்றச்சாட்டு
இது குறித்து அவ்வப்போது டிஎஸ்பி அலுவலகத்தை அப்பெண் அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு முறையாக பதிலளிக்காமல் காவல்துறையினர் இழுத்தடிப்பு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி வித்யா கிஷோர் ஷர்மா பணி மாறுதல் காரணமாக வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் இருந்தும் டிஎஸ்பி நடவடிக்கை எடுக்காமல் இருந்தது அப்பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றிருக்கிறார்.

விசாரணை
அப்போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு இருக்கையில்தான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஎஸ்பி வித்யா கிஷோர் ஷர்மா இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை மறைக்க ரூ.5 லட்சம் லஞ்சமாக பெற்றது வீடியோவில் பதிவாகியிருந்துள்ளது. இது காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக வித்யா கிஷோர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த லஞ்சம் குற்றச்சாட்டை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை முழுவதும் மொரதாபாத் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதவி இறக்கம்
இவ்வாறு இருக்கையில், இந்த குற்றச்சாட்டில் ஷர்மா லஞ்சம் பெற்றது உண்மை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே டிஎஸ்பி பதவியிலிருந்து அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஆக பதவி இறக்கம் செய்வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக முதலமைச்சரே நேரடியாக தலையிட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று பலர் கூறி வருகின்றனர். அதேபோல ஷர்மா மீண்டும் டிஎஸ்பி ஆக வேண்டும் எனில் 10-15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் எப்படியாயினும், இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை ரத்து செய்துவிடும் என்றும் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை எனவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications