குழந்தைகள் பிச்சை எடுப்பது ஆபத்தானது.. சாட்டையை சுழற்றும் யோகி ஆதித்யநாத்.. 102 பேர் மீட்பு
லக்னோ: பிச்சை எடுப்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

"முக்கிய மந்திரி பால் சேவா யோஜனா" மற்றும் ஸ்மைல் திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் பிச்சை எடுத்த 102 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எதையாவது பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையும், ஆர்வமும் இருக்கும் என்றார். 'ஸ்மைல் ப்ராஜெக்ட்' மற்றும் முக்யமந்திரி பால் சேவா யோஜனா ஆகியவற்றில் இணைவதன் மூலம் அவர்கள் முன்னேறி வருகின்றனர், என்றார். குழந்தைகளை பிச்சை எடுப்பதில் இருந்து மீட்க முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
பழங்காலத்தில் பிச்சை எடுப்பது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். இதன் மூலம், ஒரு 'சன்னியாசி' (துறவி) தனது ஈகோவை விட்டுவிட்டு சமூகத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் ... ஆனால் இன்று அது வேறுபட்டது பிச்சை எடுப்பது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அவர் கூறினார்.
பள்ளிக்குச் சென்று அரசுத் திட்டங்கள் மூலம் பயன்பெறும் வாய்ப்புள்ள குழந்தைகள், சமுக விரோத கும்பல் மூலம் பிச்சை எடுக்கும் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற பல கும்பல்களுக்கு எதிராக அரசு அவ்வப்போது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பிச்சை எடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள கும்பல்களை கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஸ்மைல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேச மாநில அரசாங்கம் இந்த குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு முதல், அடிப்படைக் கல்விக் குழு அனைத்து குழந்தைகளுக்கும் ஆடைகள், பைகள், புத்தகங்கள், ஸ்வெட்டர்கள், காலணிகள் மற்றும் காலுறைகளை வழங்கி வருகிறது. இன்று, மாநிலத்தில் 1.91 கோடி குழந்தைகள் இந்த வசதியால் பயனடைகின்றனர் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றும் ஆதித்யநாத் கூறினார். பிச்சை எடுக்கும் பணியில் ஈடுபடும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் மூலம் அவர்களுக்கு பணிகள் அளிக்கப்படுகிறது. ஒரு சிறிய முயற்சியால், அத்தகையவர்கள் நல்ல மற்றும் திறமையான குடிமக்கள் வரிசையில் சேர முடியும், என்றார். ஆதரவற்ற மக்களுக்கு இரவு தங்குமிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிச்சையெடுப்பது அல்ல கடின உழைப்பே பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று கூறிய அவர், சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி பணியாளர் சக்கி தனது வருவாயை மிகவும் அதிகரித்துள்ளதால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 1.20-1.30 லட்சம் சம்பாதிக்கிறார். பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஆதரவற்ற குழந்தைகள், அடல் குடியிருப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச குடியிருப்புக் கல்வியைப் பெறுவார்கள், என்றார்.
கொரோனா தொற்றுநோய்களின் போது அனாதையாகி பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகள் 'உத்தர பிரதேச முதல்வர் குழந்தை உதவித் திட்டத்தில்' இணைக்கப்பட்டுள்ளனர், என்றார். கொரோனா அல்லாத பிற நோய்களால் பெற்றோர் இறந்த குழந்தைகளின் நலனுக்காக, மாநில அரசு 'உத்தரப் பிரதேச முதல்வர் பால் சேவா யோஜனா' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications