பிரதமர் மோடி வாரணாசியில் முன்னிலை.. காங்கிரஸ் அஜய் பின்னடைவு.. தேர்தல் ஆணையம்!
லக்னோ: பிரதமர் மோடிக்கு வாரணாசி தொகுதியில் முன்னிலை ஏற்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் 3 கட்டத்தில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்த நிலையில் 4ம் கட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு 36424 வாக்குகள் கிடைத்துள்ளன. 619 வாக்குகள் அவர் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய்க்கு 35805 வாக்குகள் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் ஆவார். இது முதல் 4 கட்டம் என்றாலும் மோடி இப்போது பின்னடைவில் இருந்து முன்னிலையை பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மட்டும் இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் கோட்டையிலேயே இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னணி பெற்றுள்ளது.
நிலவரம் என்ன?: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது.
2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன.
எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.
வாரணாசி வரலாறு: கடந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி 674,664 வாக்குகள் பெற்று வென்றார். கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இங்கே காங்கிரஸ் கட்சி ஷாலினி 195,159 வாக்குகளை பெற்றார். அப்போது காங்கிரஸ் அஜய் ராய் 152,548 வாக்குகளை வென்றார்.
அதே அஜய் ராய் தற்போது மோடியை முந்தி முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்தார் . நான் மோடியை வீழ்த்துவேன். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டுத்தான் அஜய் ராய் இங்கே போட்டியிட்டார்.
முக்கியமாக வேட்புமனு தாக்கல் செய்யும் போதே அதை சொல்லிவிட்டுத்தான் சென்றார். இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் சொன்னது போலவே வாரணாசி தொகுதியில் மோடிக்கு கடும் போட்டி கொடுக்கிறார் . அங்கே போக போக முடிவுகள் மாறலாம்.
இது முதல் 2 கட்டம் என்றாலும் மோடி தொடக்கத்தில் பின்னடைவு பெற்று பின்னர் முன்னிலை பெறுவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications