ஷாக்.. ஒரே சிறையில் 63 கைதிகளுக்கு எய்ட்ஸ்.. "ஐயோ.." மிரண்டுபோன உ.பி அதிகாரிகள்! அதிர வைக்கும் தகவல்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே சிறையில் 63 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகத் தவறு செய்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் இடம் தான் சிறை.. ஆனால், சிறைகள் எப்போதும் அப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் சிறையிலும் கூட சில மோசமான விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது.

அப்படிதான் இங்கே உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறையில் பலருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறை நிர்வாகம் தரப்பில் இது தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
எய்ட்ஸ்: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மாவட்டச் சிறையில் கடந்த 2023 டிசம்பர் மாதம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சுமார் 36 கைதிகளுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பே அங்கு 27 பேருக்கு எய்ட்ஸ் இருந்த நிலையில், இதன் மூலம் அந்த ஒரு சிறையில் மட்டும் எய்ட்ஸ் பாதிப்பு கொண்ட கைதிகள் எண்ணிக்கை 63ஆக உயர்ந்து உள்ளது.
இந்த சோதனையை அதிகாரிகள் முதலில் கடந்த செப். மாதமே செய்யத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அப்போது பரிசோதனை கருவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலேயே இந்த சோதனை டிசம்பர் இறுதியில் நடத்தப்பட்டது.
சிறைத் துறை அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இப்போது எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.. அவர்களுக்குச் சிறைக்கு வெளியே எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.. அவர்கள் போதைப் பொருள் எடுத்துக் கொண்ட போது ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்கள் ஊசியை இவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அதுவே எய்ட்ஸ் பாதிப்பிற்குக் காரணமாகும். சிறைக்கு வந்த பிறகு எந்த கைதிக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை" என்கிறார்கள்.
விஜய் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. 2026 தேர்தலில் கறமிறங்கும் தமிழக வெற்றி கழகம்.. நாற்காலி கிடைக்குமா?
இதன் காரணமாக எச்.ஐ.வி-பாசிட்டிவ் கைதிகள் அனைவரும் இப்போது லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளையும் அவர்களின் உடல்நிலையையும் இப்போது சிறை நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
உயிரிழப்புகள் இல்லை: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்று காரணமாக எந்த உயிரிழப்பும் ஜெயிலில் ஏற்படவில்லை என்று சிறை நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் சிறைக்குள்ளேயே வைத்து தேவையான சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
என்ன தான் சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கங்கள் வந்தாலும் கூட இத்தனை பேருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது லக்னோ மாவட்ட சிறையில் உள்ள சுகாதார சூழல் குறித்து இது கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர்களுக்கு எப்படி வைரஸ் பாதிப்பு வந்திருக்கும் என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், சிறையில் மற்றவர்களுக்கும் இந்த எய்ட்ஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்த தகவல்கள் மநாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications